யாத்வேஷம்
Original price was: ₹450.00.₹428.00Current price is: ₹428.00.
Description
ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான். வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக்
கடைகளில், எங்கும் ஹிட்லரின் ‘மை கேம்ப்’ பளபளக்கும் பிரதிகள் கிடைக்கின்றன. எங்கிருந்து மறுபடியும் இந்த உற்சாகம்- ஏன் அவன் ‘வெற்றி’ ஆர்வத்தைத் தூண்டுகிறது. யாருக்கு இலட்சியமாகிறான்? ஹிட்லர் மறுபடியும் பாராட்டுக்குரியவனாகிறானா? கேள்வி என்னை வாட்டுகிறது. பயமுறுத்துகிறது. 12 வருடங்களுக்கு முன்பு, கோரிப்பாளையத்து இந்த யூதர்களின் சமாதிகள், எனக்குள் ஒரு கதையைப் பிறக்கவைத்தன. ஹிட்லரின் மண்ணிலிருந்து காந்தியின் மண்ணிற்கு வந்த குட்டி யூதச் சிறுமியின் கதை அது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த யூதர்களின் உலகை நாவலில் திறந்துகாட்ட முயன்றேன். அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி,
நின்று பார்த்தது உலகம். இன்று ஹிட்லர் எங்கே வேண்டுமென்றாலும் பிறக்கலாம். அமெரிக்காவில், ஜெர்மனியில், இஸ்ரேலில், ‘அகிம்சையே உயர்ந்த தர்மம்’ என்று முழங்கும் இந்தியாவில் கூட, ‘நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்’, நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது’ என்ற நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.5 cm |
| Author | ஆசிரியர்:நேமிசந்த்ரா, தமிழில்: கே.நல்லதம்பி |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 360 |
| Format | Paperback |
| ISBN | 9788194734031 |



Reviews
There are no reviews yet.