ரிஷிமூலம்

Original price was: ₹165.00.Current price is: ₹156.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இந்த ரிஷிமூலம் என்கிற கதையை நான் மூன்று வாரம் தினமணி கதிரில் எழுதினேன். அதன்பிறகு தினமணி கதிரில் வாசகர் கடிதம் ஒன்றைப் பிரசுரித்து, ‘இனிமேல் இது போன்ற கதைகள் தினமணி கதிரில் பிரசுரிக்கப்பட மாட்டாது ‘ என்ற ஆசிரியர் குறிப்பும் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ரிஷிமூலம் கதையை ஆதரித்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் எனக்கும் கதிர் ஆசிரியருக்கும் வரலாயின. இப்போதுகூட இலக்கிய விமர்சனம் பயில்கிறவர்களாலும் வாசகர் வட்டாரங் களிலும் இந்த ரிஷிமூலம் சமயம் கிட்டுகிற போதெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. இது பற்றிய எத்தனைவிதமான அபிப்பிராயங்கள் உண்டோ அத்தனையையும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இந்தக் கதையை எழுதியதன் மூலம் ஒரு நல்ல கதை எழுதி இருக்கிறேன் என்பதைத் தவிர நான் இந்தச் சமுதாயத்தை உயர்த்தி விட்டதாகவோ கெடுத்து விட்டதாகவோ நம்பவில்லை. அப்படிப்பட்ட நோக்கங்கள் எதுவும் – கதை எழுதுகிறவன் என்ற முறையில் எனக்குக் கிடையாது. இந்தச் சமுதாயத்தை உயர்த்துகிற பணியில் எல்லா மனிதர்க்கும் என்ன பங்கு உண்டோ, அந்தப் பங்கு எனக்கும் உண்டு. எல்லாரையும் மாதிரி நானும் ஒரு கூடை மண் கொட்டவோ, ஓட்டுப் போடவோ தயார். அந்தப் பணிக்கான எனது பங்கை மறுக்க நான் கதை ைஎழுதுவதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி ஒதுங்குவது நியாயமாகாது.
நான் ஐந்தாண்டுத் திட்டங்களுக்குப் பிரசார பிரசுரங்கள் எழுத வேண்டுமானால் அதையும் மகிழ்ச்சியுடன் செய்வேன். ஆனால் அது வேறு; கதை எழுதுவது வேறு. நான் பல சந்தர்ப்பங்களில் கூறியவற்றைத்தான் மறுபடியும் இங்கே நினைவூட்டுகிறேன். நான் கண்டதை-அதாவது உலகத்தால் எனக்குக் காட்ட அதாவது வாழ்க்கை எனக்கும் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன். கேவலமாக அல்லது அதுவே அதையே திரும்பவும் உங்களிடம் சொல்லுகிறேன். உயர்வாக, உன்னதமாக எப்படி இருந்த போதிலும் எனக்கெள் அசிங்கமாக, அது அற்பமாக. அது பழி? அல்லது புகழ்?
எனது முதல் சிறுகதைத் தொகுதி முன்னுரையில் நாள் ஒரு கம்யூனிஸ்டாக இருந்த காலத்திலேயே மேலே கண்டவாறு எழுதி இருக்கிறேன்.
ஏதோ நான் திசை மாறிவிட்டதாகவும் வழி வந் விட்டதாகவும் என் பின்னால் வருகின்ற சில பேர் கூ குரலிடுகிறார்கள். பெருந்தன்மை காரணமாகவோ எனது வேலையில் நான் முனைந்திருக்கையில் ஏற்படுகின்ற அலட்சிய காரணமாகவோ, நான் இவர்களுக்குப் பதில் சொல்லாமலும், ‘ச அப்படியே வைத்துக்கொள்!’ என்கிற அலுப்போடும் மௌமை யிருந்தது உண்டு.
நான் எந்தக் கொள்கைக்கும் எந்தக் கூட்டத்துக்கும் எப்போதும் தாலி கட்டிக் கொண்டதில்லை.
ரிஷிமூலம் கதையினா கதையினால் சோஷலிசத்திற்கு என்ன லாபம் என்று கேட்கிறார்கள். எத்தனையோ சமுதாயப் பிரச்னைகள் இருக்க, இதை ஏன் எழுதவேண்டும் என்று கேட்கிறார்கள் கீழ்வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்ட நாற்பத்தைந்து ஹரிஜன விவசாயிகளைப் பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேட்கிறார்கள். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குமுறல்கா பற்றி எழுதி இருக்கலாமே என்கிறார்கள்.
இவர்களது யோசனைகளுக்கு மிக்க நன்றி என்ற சொல்வதைத் தவிர இவற்றிற்கு என்னிடம் இலக்கிய ரீதியாா வேறு பதில் இல்லை. இவற்றைப் பற்றியெல்லாம் எழுதக் கூடார் என்று நான் எங்கேயும் சொன்னதாக எனக்கு நினைவில்லை எழுத மாட்டேன் என்றும் நான் சொல்லவில்லை. நான் எழுதியதைப்பற்றி விமர்சனம் செய்ய வந்தவர்கள் நான் எழுதாததைப் பற்றிக் கேள்விகள் எழுப்புவது என்ன விமர்சன ஞானம் என்று எனக்குப் புரியவில்லை.
என் கதைகளைத் தாண்டி என்னைக் கணிக்க முற்படுகிற காரியத்தில் பலர் முனைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட விமர்சனத்தைச் செய்ய வருகின்ற அனைவருமே தாங்கள் யார் என்பதைத்தான் எனக்குக் காட்டிக் கொள்கிறார்கள்.
தங்கள் அரை வேக்காட்டுப் படிப்பாற்றலையும், தாங்கள் தழுவி இருக்கும் கொள்கைகளின் மேல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறி மயக்கத்தையும் தமுக்கடித்து ஊரறியச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறவர்கள் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு தமுக்கு இல்லாததனால் ஜெயகாந்தன் என்று முரசத்தை ஓங்கி முழக்குகிறார்கள். எனக்கு இதில் மகிழ்ச்சியே.
ஆனால் இந்த முரட்டு விமர்சகர்களில் பலர்கொட்டிக் கொட்டி முழக்குவது தங்கள் குருட்டுத் தனத்தைத்தான்.
மேலும் இவர்கள் இன்றைக்குத் தழுவி இருக்கிற கொள்கை களைக் கடந்த காலத்தில் நானும் சார்ந்திருந்து இப்போது அவற்றைக் கை கழுவிவிட்டு வந்துவிட்டதாகக் கருதிக் கொண்ட கோபமும் பகைமையும் இவர்களது விமர்சனத்தின் ஆதார சுருதியாகவும் ஆரவார கோஷமாகவும் ஆர்ப்பாட்டம் செய்கிறது.
அதற்குமேல் எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கட்டிவிட வேண்டும் என்கிற இவர்களது ஆத்திரமும் தெரிகிறது.
‘சமுதாயம் உன்னைத் தூக்கி எறிந்துவிடும்’ என்று எச்சரிக்கை விடுகிற மிரட்டும் தோரணை (Black Mailing)யும் தெரிகிறது.

Additional information

Weight 0.15 g
Dimensions 0.9 × 12 × 18 cm
Author

ஜெயகாந்தன்

Publisher

மீனாட்சி புத்தக நிலையம்

Pages

176

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ரிஷிமூலம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories