லியோ டால்ஸ்டாய் கதைகள்
Original price was: ₹188.00.₹178.00Current price is: ₹178.00.
Description
லியோ டால்ஸ்டாய் என்று அழைக்கப்படும் இவர் 1828இல் பிறந்தார்.
டால்ஸ்டாய் செல்வக் குடியிலே பிறந்திருந்தாலும் அவருடைய வாழ்க்கை ஒரு சோகக்கதையாகவே இருந்தது. டால்ஸ்டாய் படிப்பில் சூட்டிகையானவராக இருக்கவில்லை.
ஆனால் இவருக்கு தனது தாய் மொழியான ருஷ்ய மொழி தவிர பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், போலீஷ், செக், பல்கேரியா, டாடார், இத்தாலி, அராபி. டச்சு, இலத்தீன், கிரேக், ஹெப்ரியூ இந்த மொழிகளிலும் நல்ல தேர்ச்சி இருந்தது. அதனால் இம்மொழிகளிலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை யெல்லாம் வாசிக்கும் பேறு பெற்றார். அவற்றை ஆராயவும் செய்தார்.
தான் கற்றறிந்த, கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை வாழ்க்கையில் பின்பற்றவும் முயன்றார். ஆனால் அவர் வாழ்க்கை முள் பாதையாகத்தானிருந்தது. ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார்.
டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர். ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப்பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள்.
‘உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய்’ என்றார் புத்தர்.
இவர்களின் கருத்துக்களைத்தான் டால்ஸ்டாயும் தன் கதைகளில் வலியுறுத்தியுள்ளார்.
உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் டால்ஸ்டாய் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை, ஐம்பது வருடங்களை இலக்கியப் பணிக்கென்றே அர்ப்பணித்தார். கதைகள், குட்டிக்கதைகள், புதினம், நாடகம், சுட்டுரை என்று இவர் தடம் பதிக்காத துறையே இல்லை.
அவருடைய நீதிக்கதைகளில் சில இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. சிறுவர் முதல் பெரியவர் வரை படித்து மகிழத்தக்க அருமையான பொக்கிஷம் அவரது கதைகள் என்றால் மிகையாகாது. நீங்களும் இவற்றைப் படியுங்கள். மகிழுங்கள்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author | ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய் தமிழில்: கார்த்தீபன் |
| Publisher | புத்தகாலயம் வானவில் |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9789382578055 |



Reviews
There are no reviews yet.