வைரமுத்து சிறுகதைகள்
Original price was: ₹300.00.₹225.00Current price is: ₹225.00.
Description
புதுமைப்பித்தன் இறந்த ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன்’ என்ற ஜெயகாந்தன் வாக்குமூலத்தைப்போல ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன்.
கவிதைகளிலும் – பாடல்களிலும் – நாவல்களிலும் கரைந்துகிடந்த நான் என் அறுபத்தோராவது வயதில் இந்தச் சிறுகதை என்ற வடிவத்தைக் கையிலெடுத்தேன்.
நான் ஓர் உழவன் மகன். திறந்தவெளி வாழ்க்கையில் பிறந்தவன். எங்கோ ஒரு கள்ளிமரத்தில் விசிறி எறியப்பட்டிருக்கும் என் தொப்பூழ்க் கொடி. மறுகணமே கோழியறுக்கப் பயன்பட்டிருக்கும் என் தொப்பூழ்க்கொடியறுத்த அரிவாள்மணை.
நல்ல பாம்பின் உடல்போன்றது எனது உரைநடை. அதில் தொப்பையோ தொங்குசதையோ இல்லை.
உரைநடையில் கவிதை காட்டுவது வாசகன்பால் நான் காட்டும் கருணையாகும்; மற்றும் மதிப்பாகும்.
ஒரு மரத்தில் நுழைந்து அதைக் குடைந்து குடைந்து மரத்திசுக்களை வெளித்தள்ளும் ஒரு வண்டுமாதிரி, எனக்குள் விழுந்து என்னை ஊடறுத்து உறங்கவிடாமல் செய்யும் உள்ளடக்கங்களுக்கே உருவம் கொடுத்திருக்கிறேன்.
மனிதப்பிரவாகத்தில் மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்வென்னும் நதிக்கரையில் அறவிருட்சத்தை வீழாமற்காக்கும் திருப்பணியில் நம்பிக்கையோடு இயங்குவதே நல்லெழுத்து.
Additional information
| Weight | 0.65 g |
|---|---|
| Dimensions | 2.2 × 16.3 × 24 cm |
| Author | வைரமுத்து |
| Publisher | சூர்யா லிட்ரேச்சர் வெளியீடு |
| Pages | 360 |
| Format | Hard Cover |
| ISBN |



Reviews
There are no reviews yet.