ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள்
Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
ஓஷோ ரஜனீஷின் சொற்பொழிவுகள், தத்து வங்கள் ஒரு மாறுபட்ட சக்தியாக மனித மனங்களை சுத்திகரிப்பு செய்துகொண்டே இருக்கின்றன, காலம் காலமாய்.
அவற்றில் ஒரு சக்தி இது:
“நம் முன்னோர்கள், சாதிக்க வேண்டும் என்று தான் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை லட்சியமாகவே கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். சாதிப்பவர்களாக இருக்கவே நமது மனதைப் பழக்கி வைத்திருக்கிறார்கள். மனிதர்கள் லட்சியவாதிகளாக இருக்கவேண்டும் என்ற அடிப் படையான கருத்தைச் சார்ந்தே நமது கல்வி, பண்பாடு, சமயம் எல்லாம் அமைந்திருக்கின்றன. லட்சியத்துடன் செயல்பட்டவனே வாழ்க்கையில் திருப்தியும் வெற்றி யும் காண முடியும். ஆனால், யதார்த்த வாழ்க்கையில் நாம் அறியாமை, மூடப்பழக்கம், உழைப்பின்மை ஆகியவற்றை லட்சியமாகக் கொண்டு திசை திரும்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி வாழ்ந்தால் சாதிப்பது எப்படி?”
அருமையான வாழ்வியல் தத்துவம் இது.
இதைப் போன்ற ஊட்டச்சத்தாக இந்த நூலில் 70 தத்துவங்களும், அவற்றை விளக்கி 70 சிறுகதைகளும் எளிய தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறிய தொகையில் மனதை ஊக்கப்படுத்தும் மிகச் சிறந்த ஊட்டச்சத்து பானம் ‘ஓஷோ: தத்துவ விளக்கக் கதைகள்’ என்ற இந்த நூல். இந்தக் கதைகளைப் பருகினால் நீங்கள் உயரமாக வளரமாட்டீர்கள். உயரத்தைத் தொடும் அளவிற்கு வளர்வீர்கள்.
இந்த நூலை மிகச் சிறப்பாக வெளியிட்ட நர்மதா பதிப்பக உரிமையாளர் திரு. டி.எஸ். இராமலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.
இந்த நூல் பற்றி ஒரு வரி எழுதுங்கள்.
– மு.அப்பாஸ் மந்திரி
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.5 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 224 |
| Format | paperback |
| ISBN | 9789391561376 |



Reviews
There are no reviews yet.