நந்திபுரம்

Original price was: ₹760.00.Current price is: ₹684.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இந்த நந்திபுரம் நாவல் ஒரு அதிசயம்!
ஆம்… என்வரையில் நான் எழுதிய ஒட்டுமொத்த நாவல் களிலேயே இது சற்று அதிசயமானதுதான்.
சஞ்சிகைகளுக்கு கதை எழுதிய நான், முதன் முதலாக ஒரு கணிப்பொறிக்கு எழுதிய நாவல் இது/ அதனால் மட்டும் இதை நான் அதிசயம் என்று கூறவில்லை.
இக்கடிதத்தை எழுதிடும் வேளையில் இதை வாசித்தவர் களின் எண்ணிக்கை எனக்குத் தெரியவந்தது. கணிப்பொறி அல்லவா? அதனால் ‘Bynje App’ என்கிற அந்த கணிப்பொறி கணக்குபோட்டு சொல்லிவிட்டது.
21 லட்சத்துக்கும் மேலானவர்கள் வாசித்துவிட்டதை அதன் மூலம் நான் தெரிந்துகொண்டேன். இது பொய்க் கணக்கல்ல. மிகத் துல்லியமான கணக்கு.
ஒரு வார இதழிலோ, மாத இதழிலோ எழுதும்போது இப்படி கணக்கு போட முடியாது. பெரும் வரவேற்பு பெற்றது என்றோ இல்லை. சுமாராக இருந்தது என்றே பொதுவாகவே அதைக் குறிப்பிட முடியும். ஆனால் கணினி சார் எலெக்ட்ரானிக் மீடியாவில் ஈ புத்தகங்களில் இந்த பொதுவான கணிப்புக்கு தேவையே இல்லை. அது வாசிப்பவர்கள் கணக்கை அணுப்பிச் கின்றி சொல்லிவிடுகிறது. இந்த நந்திபுரம் வரையிலும் கூட அப்படித்தான் சொல்லிற்று.
இந்த நாவலை நான் மிகுந்த சுதந்திரமுடன் எழுதினேன். அதே சமயம் என் சக எழுத்தாளர்களுக்கு நடுவில் ஒரு ஒட்டப் பந்தயத்தில் எல்லோரும் பங்கெடுத்துக்கொண்டு ஓடுவது போலவும் கருதினேன்.
பத்திரிகைகளில் எழுதுகையில் நமக்கு போட்டி என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ‘Bynje App’ல் எழுதுகையில் இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் அவ்வளவு பேருமே ஒன்றாக மகிழ்ச்சிக்குரிய இந்த நாவலை திருமகள் பதிப்பகம் நூலாக வெளியிடுவது மேலும் மகிழ்வுக்குரிய ஒன்று. இந்த நந்திபுரம் கைபேசி உள்ளவர்களை கடந்து புத்தகமாய் வாசிப்பதே நிறைவு என்கிற கொள்கை கொண்டவர்களுக்காக நூலாக வெளிவருகிறது.
ஒளிப்புலத்தில் கிடைத்த அதே ஆதரவு, ஓலைப்புலம் எனப்படும் இத்தாள் வடிவ புத்தகத்திற்கும் கிடைக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஒளிப்புலத்தில் இது வெளிப்பட காரணமாக இருந்த ‘Bynje App’ன் கர்த்தாக்களான Nation Press’ நிறுவனத்துக்கும், பொறுமை இழக்காமல் என் படைப்பை பெற்று பிழைகள் இன்றி வெளிப்பட துணை செய்த திருமதி ப்ரியதர்ஷினிக்கும் என் இதய நன்றிகள்!

Additional information

Weight 0.85 g
Dimensions 4.6 × 14 × 21.5 cm
Author

இந்திரா சௌந்தர்ராஜன்

Publisher

திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்

Pages

752

Format

Hard cover

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நந்திபுரம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories