மாயவன் காதலி
Original price was: ₹360.00.₹342.00Current price is: ₹342.00.
Description
இது ஒரு ஆச்சரியமான நாவல்!
இது எழுதப்பட்ட பின்பலத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஒருநாள் எழுத்தாள நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இருந்து போள் வந்தது. நலம் விசாரித்த திரு பிரபாகர் ‘பாக்யா இதழில் ஒரு தொடர் எழுதமுடியுமா? என்று கேட்டார்.
பாக்யாவுக்கு பிரபல நடிகரும் இயக்குநருமான திரு. K.பாக்யராஜ்தான் ஆசிரியர் – இவர் போய் கேட்கிறாரே என்று எனக்குள் குள் வியப்பு. அவரே விளக்கினார். ளக்கினார். ‘பாக்யராஜ்” சார் நல்ல தொடர் ஒன்று தன் இதழில் வரவேண்டும் என்று விரும்புகிறார். என் தொடர் ஒன்று வந்தபடி உள்ளது. உள்ளது. நீங்கள் நீங்க நீங்கள் எழுதினால் நன்றாயிருக்கும் என்று தோன்றியதால் கேட்கிறேன். சாரும் உங்களுடன் பேசுவார் என்றார்.
அதேபோல பாக்யராஜ் சாரும் பேசினார். எனக்கு சற்று பிரமிப்பாக கூட இருந்தது. சிறு வயதில் நான் சிவாஜி ரசிகன். வளர்ந்து எழுத்தாளனாகிவிட்ட நிலையில் சார்புகள் உதிர்ந்து ஒரு பொதுவான ரசிகத்தன்மை உருவாகிவிட்டது. ஆனால் அந்த ரசிகத் தன்மைக்கு அதிக தீனி போட்டவர் திரு K.பாக்யராஜ் நான் அவரை வெகுவாக ரசித்து வியந்திருக்கிறேன். நடுத்தட்டுக்கும் கீழான குடும்பத்தில் இருந்தும், எந்த மன்மத தோற்றப் பொலிவுகளும் இல்லாமல் வயலில் இருந்து பிடுங்கிய ஒரு கடலைச் செடி போல மிக இயற்கையான தன்மைகளோடு சினிமாத்துறைக்குள் நுழைந்து படிப்படியாக முன்னேறியவர் இவர். இவரைப் பார்த்து குப்பன் சுப்பனுக்கெல்லாமும் தன்னம்பிக்கை முளைத்தது. கோடம்பாக்கம் ஒன்றும் சந்திர மண்டலத்துக்கு பக்கத்தில் இல்லை. நாமும் நுழையலாம் சாதிக்கலாம் என்கிற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது.
இந்த தொடரை நான் பாக்யாவில் எழுதிய நாளில் குமுதம் சினேகிதியில் ‘ரங்கநதி’ என்ற ஒரு தொடர். பிராம்மண குடும்ப பின்புலத்தில் ஸ்ரீரங்கத்தை மையமாக வைத்து எழுதிய தொடர் அது!
தினமலர் வாரமலரில் ‘மாயமாய் சிலர்’ என்று அமானுஷ்யமாய் ஒரு தொடர். இது போக ‘துளிர்க்கும் என்று ஒரு சமூக தொடர். இப்படி பல்வேறு தொடர்கள் எழுதிக் கொண்டிருந்த நிலையில் முற்றிலும் மாறுபட விரும்பி இந்த தொடரை கிராமிய தளத்துக்கு வடிவமைத்துக் கொண்டேன்.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 320 |
| Format | Hard cover |



Reviews
There are no reviews yet.