நினைவு நாடாக்கள்

Original price was: ₹320.00.Current price is: ₹304.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

வாழ்க்கை என்பது மழை நாளில் உன் வீட்டு வாசலில் முளைக்கும் நாய்க்குடை அல்ல; அது நிழற்குடை!
செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்! நாளைப் பொழுதை நாயகனல்லவோ தீர்மானிக்கிறான்!
அவனவன் ஏற்றமும் இறக்கமும் அவனவன் எண்ணத்தின்பாற்பட்டது. விதைத்தது விளைகிறது!
எந்த விதை விருட்சமாகும்; எந்த விதை விரயமாகும் என்பதையும் எந்த விருட்சம் விறகாகும்; எந்த விருட்சம் வீணையாகும் என்பதையும் எவராலும் எடுத்தோத ஏலாது. முக்காலத்தையும், கருத்தன் தன் கருத்தில் வைத்திருக்கிறான்!
எளிமையை வலிமையாய்க் கொண்டவரை எவ்வுயிரும் கைகூப்பித் தொழும்!
நடக்கும் என்று நினைத்தது. நடக்காது போகுமாயின், உன் நினைப்பை ஈசன் நிராகரிக்கிறான் – அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்துகொள்!
ஒரு செயல் தீங்கு விளைவிக்குமாயின், அந்தச் செயலுக்கான தண்டனை என்னவோ -அதே அளவு இல்லாவிடினும் அந்தச் செயலுக்கு மூலமாக விளங்கிய எண்ணத்துக்கும் தண்டனை உண்டு!
சகல பாவங்களுக்கும் துணிந்து மனிதனைத் துரத்துவது காலியாகக் கிடக்கும் இரைப்பைதான்!
பட்டினியாயிருப்பவன் காதுகளில் பக்தியும் புகாது; பகுத்தறிவும் புகாது!
தாய் – அசல்; தெய்வம் – அதன் நகல்!
நாணயமான ஒரு நாத்திகன், நாணயமற்ற ஓர் ஆத்திகனைவிட நூறு மடங்கு மேலானவன்!
படங்களுக்குப் பாட்டு எழுதி கோலோச்சுதல் வேறு; கோதறு தமிழில் நூலோச்சுதல் வேறு! முன்னது -இருந்து வாழ்வதற்கு உதவும்; பின்னது – இறந்து வாழ்வதற்கு உதவும்!
என் படவுலக வெற்றிக்கு, அதிர்ஷ்டம்தான் அடிப்படை என்று பேசப்படுமாயின், அது என் பெற்றோருக்கு நான் தேடிவைக்கும் பெருத்த அவமானமாகும்!
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!

Additional information

Weight 0.4 g
Dimensions 1.5 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

312

Format

paperback

ISBN

9788196120566

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “நினைவு நாடாக்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories