டொமினிக்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
சற்று முன்புதான் உங்களது வலைத்தளத்தில் ‘ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்.’ சிறுகதையை வாசித்தேன். இது உங்களது தொகுப்பில் முன்பே வாசிக்கக் கிடைத்த சிறுகதைதான். ஆனால் இன்று வாசிக்கும்போது உங்களது படைப்பினைக் குறித்து வெகு நாட்கள் பனி மூட்டத்தில் காணக் கிடைக்கும் மலைஅருவி போல சிக்கியும், சிக்காமலும் இருந்த ஒன்று பிடி கிடைத்து விட்டது. உங்களை உங்கள் சமகாலப் படைப்பாளிகளிடமிருந்து தனித்தன்மையுடன் நிறுத்துவது அதுதான் என நினைக்கிறேன்.
நான் இலக்கியம் வாசிக்க வந்தது 80 களின் மத்தியில், அதாவது என் பதின்ம வயதுகளின் துவக்கத்தில். அப்போது வெகுவாக என் வாசிப்பு வட்டத்தில் சிலாகிக்கப்பட்ட வண்ணநிலவன், வண்ணதாசன், ஜி.நாகராஜன் ஆகியோர் எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. நெல்லை மாவட்டத்தின் உள்ளடங்கிய பேரூராட்சி (வாசுதேவநல்லூர்) ஒன்றில் இவ்வளவு எதிர்பார்ப்பு அதிகம் என்றே வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் மிக வியப்பாக என்னை முதலில் வந்தடைந்தது அசோகமித்திரன் அவரது ஒற்றன் நாவல் நான் முதலில் வாசித்த உருப்படியான இலக்கியப் படைப்பு. அதிலிருந்து தி.ஜா., சுஜாதா.. அப்புறம் சு.ரா., கு.ப.ரா., கி.ரா., லா.ச.ரா., என்று வாசிப்பு நீண்டது. ஆனால் பெயர்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடியடைந்து வாசிக்க முடிந்தது 1990 களின் மத்தியிலிருந்துதான்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 120 |
| Format | paperback |
| ISBN | 9789384598310 |



Reviews
There are no reviews yet.