சாபம்
Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
Description
சல்மாவின் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் வரும் பெண்கள் எப்போதும் பதற்றம் மிகுந்த சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். தயக்கமும் தடுமாற்றமும் அவர்களது இயல்பாகிவிட்டன. பரந்து விரிந்த ஆகாயத்தை அவர்கள் அதிகம் பார்ப்பதில்லை. நான்கு சுவர்களுக்கு நடுவில் வாழும் அவர்கள் அந்தக் குறுகிய இடத்திற்குள் வாழக் கற்றுக்கொள் கிறார்கள். இவர்களது வாழ்வின் புறச் சூழலையும் அந்தச் சூழலால் இவர்களுடைய அகம் கட்டமைக்கப்படுவதையும் சல்மா இந்தக் கதைகளில் காட்டுகிறார்.
சல்மாவின் சொற்கள் புற நிர்ப்பந்தங்களால் ஒடுங்கிய மன உணர்வுகளைக் கச்சிதமாகச் சித்தரிக்கின்றன. சூழல் குறித்த வர்ணனைகளும் பாத்திரங்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே வெளிப்படுகின்றன. சொற்களில் தெரியும் கசப்பும் வெறுமையும் இந்தப் பெண்களின் நிலையை நமக்குச் சொல்கின்றன. மனித இயல்புகள் அழகாக வெளிப்படுகின்றன . மூடிய கதவுகளுக்குள் நடமாடும் பெண்களின் காலடித் தடங்கள் என்று இந்தக் கதைகளைச் சொல்லலாம்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN | 9789381969588 |



Reviews
There are no reviews yet.