விலாஸம்
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
திருச்செந்தாழையிடம் புதியதொரு கதை சொல்லல் உருவாகியிருக்கிறது. அதாவது, புதிய காலத்தையும் புதிய அசைவையும் எழுத்தின் மூலமாக உருவாக்குதல் என்று சொல்ல வேண்டும் 2000க்குப் பின்பு தமிழில் எழுதப்பட்ட அத்தனை நவீன இலக்கியப் படைப்புகளிலும் திரைப்பட மொழியின் சாயல் இருப்பதைப் பார்க்க முடியும்.
காட்சிகளில் மயக்கத்தையும் மாயையையும் வரவழைப்பதே எழுத்தின் உச்சமாகக் கருதி வந்திருக்கிறார்கள்.
ஒரு காட்சி; அக்காட்சியில் காண முடியாத ஒன்றைக் காணச் செய்தல் என்பதுதான் இவ்வகைக்கதைகளின் சூத்திரம். இந்த வகையிலிருந்து வேறுபடுவதுதான் திருச்செந்தாழையின் சிறப்பு. அவரது கதை சொல்லும் முறை, உங்களுக்குக் காட்சிகளை உருவாக்குவதற்குப் பதில், அக்காட்சிகள் ஏற்படுத்தும் உணர்வுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும், முகக்குறிப்புகளில் அவர் காட்டும் சிரத்தை ஆச்சர்யமூட்டுகிறது. முகபாவங்களின் மூலம் அவா உருவாக்கும் சித்திரத்தை ஒரு காட்சியாக யாராலும் மீட்டுருவாக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஏனெனில், அதில் தொழிற்படும் காலமும் அசைவும் நிஜ வாழ்க்கையில் நாம் உணர்ந்த/அறிந்த காலமோ அசைவோ அல்ல. ஒரு நல்ல எழுத்திற்கான லட்சணம் இது.”
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author | பா. திருச்செந்தாழை |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 216 |
| Format | Paperback |
| ISBN | 9789390811915 |



Reviews
There are no reviews yet.