அணிலாடும் முன்றில்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார்.கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர்.நா.முத்துக்குமார்
கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா… என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் – அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார்.
ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில்!’ தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவு செய்திருக்கிறார்கள்.
தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், தமிழ் மக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவது உறுதி!
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 13.8 × 21.4 cm |
| Author | நா.முத்துக்குமார் |
| Publisher | விகடன் பிரசுரம் |
| Pages | 144 |
| Format | Paper back |
| ISBN | 9788184763713 |



Reviews
There are no reviews yet.