அன்பினி கவிதைகள் (4 புத்தகங்களும்)
Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
Description
செப்டம்பர் மாதம் என்பது ஒரு புது தொடக்கத்தின் நிமிடங்களை நினைவூட்டும் காலம். மழை துளிகள் மெதுவாக பூமியைத் தொடும் போதும், மனங்களில் மென்மையான உணர்வுகள் முளைக்கின்றன. இந்த மாதம் அன்பை வெளிப்படுத்துவதற்கும், உணர்ச்சிகளைப் பகிர்வதற்கும் மிகச் சிறந்தது.
செப்டம்பர் அன்பின் காலம் அடடா என்ன ஒரு அருமையான தலைப்பு
கவிஞருக்கு இது முதல் தொகுப்பு கவிஞரைப் பற்றி பார்ப்போம் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் எல்லோராலும் கொண்டாடப்படும் பெயர் கவிஞர் அன்பினி என்னதான் எழுதி இருக்கிறார் என்றே ஆராய்கையில் அவருடைய கவிதையே கலங்கரை விளக்கமாய் தெளிவுபடுத்தியது…
தொகுப்பு முழுவதும் அருமையான கவிதைகள் எந்த கவிதைகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் எல்லோருமே சற்று குழம்பித்தான் போவார்கள்..
இந்த வாழ்வு இன்னும் சலிக்காமல் இருக்க ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் யாரேனும் ஒருவரை நீங்கள் நேசித்துக் கொண்டிருப்பதும்
யாரேனும் ஒருவர் உங்களை நேசித்து கொண்டிருப்பதும்…..
அடடா என்ன ஒரு அருமையான கவிதை அன்பிற்குள் அடங்கிடும் இப்பிரபஞ்சம் என்பதை அழகாக உணர்த்துகிறது…
– மெஹராஜ் பேகம்
ஒரு நீண்ட பொழுதின் தொடக்கத்தை நமக்கு அறிமுகப்படுத்தும் “தேநீரும்”, ஒரு நீண்ட இரவை நமக்கு அறிமுகப்படுத்தும் “நிலவும்” ஒருவகையில் யாரையும் காயப்படுத்தாத மனிதர்களுக்கு கிடைக்கும் பேராறுதல். அப்படியாக இக்கவிதைத் தொகுப்பு முழுவதும் தேநீராலும் நிலாவாலும் நிரம்பியிருக்கிறது.
ஒரு கோப்பை தேநீரின் சுவையை மழை சற்றுக் கூடுதலாக அதிகரிக்கும், மழைக்கும் தேநீர்க்கும் அப்படி ஒரு பிணைப்பு.
எவ்வளவு நிராகரிப்புகள் இருந்தாலும் அதை ஒரு டீயில் கடந்து செல்லும் மனிதர்களும், அதே போல காயத்தோடு சற்று நேரம் மொட்டைமாடியில் நின்று, நிலவை வெறித்துப் பார்த்து ஆறுதலடையும் மனிதர்களும் இங்கு ஏராளம், அதில் நானும் ஒருத்தி.
“எப்படி இருந்தாலும் நேசிக்க
நீயென்ன நானா?”
என்ற இரண்டு வரிக் கவிதை, ஒருவரின் மீதான அளவுகடந்த கண்மூடித் தனமான மொத்தக் காதலையும் காட்டுகிறது.
“தேடல் நிறைந்த மனங்களுக்கு
தேநீர் தானே ஆறுதல்!”
என்னும்போது, எங்கே ஒரு தேடல் அளவற்று போய்க்கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு தேநீர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
“எனக்கு நிலவினை ரசிக்க
சொல்லிக்கொடுத்தவள் “அம்மா”
நினைக்க சொல்லிக் கொடுத்தவள் நீ!”
என்று நிலவை நமக்கு சோறு ஊட்ட அறிமுகப்படுத்திய அம்மாவையும், நேசம் மிகுந்த அன்பானவர்களின் நினைவால் நாம் பார்க்கும் நிலவு, அவர்களையும் நினைவுப்படுத்தும் என்பதை ஆழமாக பதிவு செய்கிறார்.
– இனிதி
சில நினைவுகள் காலத்துடன் மங்கிவிடும் என நினைப்போம்,
ஆனால் சில நினைவுகள் — மங்காது,
மாறாக நம்மோடு வாழ்ந்துகொண்டே இருக்கும்.
நம்மை விட்டு பிரியாமல், அந்த நொடிகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டும்.
அத்தகைய நினைவுகளால் நிறைந்தது தான் இந்த “நினைவுகளால் நிரம்பிய காலம்”
இது ஒரு கவிதைத் தொகுப்பு அல்ல, ஒரு உள்ளத்தின் மெளன பதிவுகள்.
அவள் இதயத்துக்குள் எழுந்த கேள்விகளும், பதிலில்லாத துயரங்களும்,
சொல்ல முடியாத சில வேதனைகளும் இதிலே உயிர் பெற்றுள்ளன.
நாம் ஒவ்வொருவரும் பெரும்பாலும் எதோவொரு நினைவுகளை சுமந்து கொண்டே தான் திரிகிறோம்.
ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த நினைவுகள் வார்த்தைகளாக மாறும் —
இவள் அந்த சிலரில் ஒருவர்.
நினைவுகள் என்பது
ஞாபகச்சுமை …!
நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா…?
உறவுகளை தொலைத்துவிட்டு
ஞாபகங்களை பாதுகாத்துக்
கொண்டிருக்கிேறாம்…!
என்று இவள் எழுதிய ஒவ்வொரு வரியும் —
ஒரு துயரத்தின் வெளிப்பாடு,
ஒரு இழப்பின் நிழல்,
ஒரு வெறுமையின் அழுகை.
இது குறிப்பிட்டு எந்த உறவையும் பற்றி அல்ல,
ஒரு பற்று முடிந்த பின் வரும் அமைதியைப் பற்றியது.
அந்த அமைதியில் சில நேரம் நிம்மதி இல்லை,
மாறாக ஒரு வேதனையின் நீண்ட ஓசை மட்டுமே உள்ளது.
“நினைவுகளால் நிரம்பிய காலம்” என்ற பெயர் சொல்லும் போல,
இந்த நூலில் ஒவ்வொரு கவிதையும் ஒரு நினைவு.
சில இனிமையில்லாத நினைவுகள்,
ஆனால் உண்மையானது.
அந்த உண்மையில்தான் இந்த எழுத்தின் உயிர் இருக்கிறது.
– அபிநயா
எப்போதெல்லாம் மழை வந்து போகிறதோ அப்போதெல்லாம் ஒரு மழைக்காலத்தின் நினைவுகள் நம்மை தொற்றிக்கொள்ளும். எப்போதோ விரல்களில் படிந்து கிடந்த ஒரு துளி நம்மை மழையின் தடத்திற்கு கூட்டிச்செல்லும்.அந்த ஈரத்திற்கு உலர்வே இல்லை அது ஒரு நியாபகம். அப்படித்தான் அன்பினியின் கவிதைகளும் நம்மை எப்போதும் அந்த ஒரு மழைக்காலத்திற்கு கூட்டிச்செல்லும். ஒரு சின்னஞ்சிறிய இலையை தன் வாயில் பற்றி நம்மை சுற்றி பறந்து கொண்டிருக்கும் பறவை அது.
அன்பினியின் கவிதைகள் எப்போதும் அன்பில் திளைத்திருக்க நிறைய அன்புகளுடன்…
– கவிஞன் மொழி
Anbin, Anbhin, Anbeen, Anbinh
Kaalam, Kaallam, Kalham, Kaalaam, anbini kavithaigal, anbini, October, Oktobar, Akthobar, Akthober
Konjam, Koncham, Konjum, Konjammm
Mazhai, Malai, Mazay, Mazhay
Konjam, Koncham, Konjum, Konjammm Thenir, Thenneer, Theeneer, Theneer Niraiya, Nirayaa, Niraaiya, Niraaya Kavithaigal, Kavithaihal, Kavithaygal, Kavithaigall, anbini kavithaigal, anbini, December, Disember, Dhisember, Dhecember Irudhiyaai, Iruthiyaai, Iruthiyaa, Iruthiyaayi Minchiya, Minchiyah, Minchiyya, Minchiyyaa
Thanimai, Thanimay, Thanimaiy, Thannimai Kaalam, Kaalaam, Kaallam, Kalham, November, Novembar, Novembaar, Novamber Ninaivugalal, Ninaivukalal, Ninaivugal, Ninaivgall
Niraindha, Niraindhaa, Niraintha, Niraindhha Kaalam, Kaallam, Kaalaam, Kalham
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 2.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 250 |
| Format | paperback |



Suruthika Shanmugam (verified owner) –
Just too good. Do yourself a favour by getting this and thank me later. This one touched my soul tbh 💕🤌🏻🫡. Awesome writing .
[...]