ஈஸ்வர அல்லா தேரே நாம்
Original price was: ₹240.00.₹228.00Current price is: ₹228.00.
Description
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹரிஜனங்களை யெல்லாம் முஸ்லிம்களாக மாற்றுகிறார்கள் என்ற பெருங் கூப்பாடு கேட்டது. இந்தக் கூப்பாடு வலுவிழந்து போயினும் இதனுடைய ரீங்காரம் இப்போதும் அடிக்கடி கேட்கிறது.
‘இதயம் பேசுகிறது’ வார இதழில் என்னை ஒரு தொடர் கதை எழுதுமாறு கேட்டபோது இதைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கதை எழுத எண்ணினேன். மதமாற்றம் நடைபெற்ற ஊர்களுக்குச் சென்று மதம் மாறியவர்கள் பலரைச் சந்தித்தேன். ஒன்று புரிந்தது! இந்த மக்கள் தமது தேங்கிப்போன வாழ்க்கையில் ஒரு அடிப்படை மாற்றத்தை விழைகிறார்கள். அதற்கான பொருளாதார சமூக நியாயங்கள் நிறையவே இருக்கின்றன என்பதுதான் அது.
மக்கள் காண விரும்பும் மாற்றம் மெய்யாக சமூக-பொருளாதார மாற்றமாகிவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிற சுரண்டும் கூட்டத்தினர்- அவர்கள் இந்து மத, மட அபிமானிகளாகவும், இஸ்லாமிய அராபிய பெட்ரோ டாலர் அபிமானிகளாகவும், கிறித்துவ ஆங்கிலோ அமெரிக்க ஐரோப்பிய அபிமானிகளாகவும் உள்ள – பணம் படைத்தவர்கள் திட்டமிட்டு நடத்திச் செய்தி பரப்பி, மக்களது மாற்றம் காணும் விழைவைத் திசை திருப்பி, வகுப்புக் கலவரமாக்கி விடுகிற காரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது தெளிவு.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 12 × 18 cm |
| Author | ஜெயகாந்தன் |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் |
| Pages | 256 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.