என் இனிய இயந்திரா
Original price was: ₹270.00.₹256.00Current price is: ₹256.00.
Description
என் இனிய இயந்திரா’ ஆனந்தவிகடன் பத்திரிகை யில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதையில் உள்ள ‘விஞ்ஞானத்தை’ வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள். ஒரு ஐஐடி மாணவர் இதில் குறிப் பிட்டிருக்கும் ‘ஹோலோ கிராஃபி’ எவ்வாறு சாத்தியமில்லை என்று பூச்சி பூச்சியாக கணக்கெல்லாம் போட்டு விளக்கியிருந்தார்.
“விஞ்ஞானக் கதை” என்பது விஞஞானப்படி சாத்தியமாக இருக்கவேண்டும் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
தப்பு.
விஞ்ஞானக் கதை (சைன்ஸ் ஃபிக்ஷன்)என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது. அதன் காலைகளில் இருளையும் ராத்திரிகளில் அமைத்துக் வெளிச்சங்களையும் தேவைப்பட்டால் கொள்ளலாம். அதன் கடவுள்கள் ப்ரோட்டான் வடிவெடுக்கலாம். அதன் பெண்கள் மகப்பேற்றை ஒட்டு மொத்தமாக இழந்து மீசை வளர்த்துக் கொள்ளலாம். அதன் நாய்கள் ப்ளேட்டோவைப் பற்றியும் ப்ரும்மசூத்திரம் பற்றியும் பேசலாம்.
ஆயிரமாயிரம் மாற்று சாத்தியக் கூறுகளை ஆராயும் அற்புதமான சுதந்தரத்தைத் தருகிறது வி.க. அதைட்பயன்படுத்தும் போது, அதன் புதிய விளையாட்டுக்களை ஆடும்போது ஒரே ஒரு எச்சரிக்கைதான் எழுத்தில் தேவைப்படுகிறது. கதையில் இன்றைய உணர்ச்சிகளுடனும் ஆசாபாசங்களுடனும் மனிதனின் எதாவது வகையில் ஒரு சம்பந்தம் அல்லது தொடர்பு காட்ட வேண்டும். அப்போதுதான் நமக்கு அதில் சுவாரஸ்யம் ஏற்படுகிறது.
ஜீனோ என்ற ரோபாட் நாய் என்னதாள் புத்திசாலித்தனமாகப் பேசினாலும் அவ்வப்போது காட்டிய மனித குணங்களால்தான் அது வாசகர்களிடம் அத்தனை பிரபலமாகியது. பிரபலமாகி ஜீனோவை கொண்டுவா என்று ஒரு மனதாக வாசகர்கள் கேட்டுக் கொள்ளும் அந்தஸ்து பெற்றுவிட்டது.
‘மறுபடியும் ஜீனோ’ அடுத்த வருஷம் எழுதலாம் என்று யோசித்திருக்கிறேன். இந்தக் கதையை ஆனந்தவிகடனில் வெளியிட்டபோது பற்பல அருமையான யோசனைகளைச் சொன்ன ஆசிரியர் பாலன் அவர்களுக்கும் புத்தக வடிவில் இதை மூன்றாம் பதிப்பாக சிறப்பாக வெளியிடும் விசா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாருக்கு என் நன்றி.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.4 × 12 × 18 cm |
| Author | சுஜாதா |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 276 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.