ஐந்து வழி… மூன்று வாசல்…
Original price was: ₹320.00.₹304.00Current price is: ₹304.00.
Description
சரித்திர நாவல் சமூக நாவல் இந்த இரண்டும் நாவல் எழுதும் கலையின் இருவேறு பிரிவுகள், இரண்டு தனித்தன் உத்திகள், இரண்டு முனைகள் அல்லது இரண்டு துருவங்கள் என்று கருதப்படுவதுண்டு.
இன்னும் சிறிது அழுத்தமாகச் சொல்வதென்றால், சரித்தி நாவல் எழுதுபவன் ஓர் இனம் சமூக நாவல் எழுதுபவன் ஓர் இளம் என்று இனப் பாகுபாடு செய்து பார்ப்பவர்களும் உண்டு.
பார்ப்போம் என்று எண்ணியே இந்திரா சௌந்தர்ராஜன் ‘ஐந்து வழி இந்த இன பேதங்களை இலக்கியத்திலாவது தகர்த்துப் மூன்று வாசல்’ புதினத்தைப் படைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
சரித்திர நாவல் என்பதும்கூட ஒரு காலத்திய சமூகத்தின் கதைதானே? இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்புகளான சில படைப்புகள் ஏன் நாளைய வரலாறாக மாறக்கூடாது? எனவே, இலக்கியத்தின் எந்தப் பிரிவுப் படைப்பாயினும் அது நன்றாக -சிறப்பாக அமைந்திருக்கிறதா என்பது மட்டுமே கவனிக்கத்தக்கது. வாசகர்களும் அவ்வாறுதான் ஒரு படைப்பை நோக்குகிறார்கள்.”
அந்த வகையில் ‘ஐந்து வழி மூன்று வாசல்’ மிகச் சிறப்பான படைப்பு என்பதே என் கருத்து.
தண்ணீரும் எண்ணெய்யும் எப்படி ஒன்றாகக் கலக்காதோ அப்படித்தான் சரித்திரமும் சமூகமும் என்ற கருத்தை மாற்றி, ஒரு தேர்ந்த ரசவாதியின் வித்தகத்தோடு இவர் இந்த ரசக் கலவையை நிகழ்த்தியிருக்கிறார். பாலில் கலந்த சக்கரை போன்று இரண்டு பாணியும் இதில் இழைந்து கலந்து சுவை கூடியுள்ளது.
இந்த முன்னுரையில் நான் கதைச் சுருக்கம் சொல்லப் போவதில்லை. நெற்கட்டாஞ்செவல் பாளையக்காரரான வீரமறவர் பூலித்தேவர் காலத்துக்கதை. அப்போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை இந்த இருபதாம் நூற்றாண்டுச் சம்பவம் ஒன்றுடன் இணைத்துச் செல்கிறது கதை அதை ஓரிரு வரிகளில் சொல்ல இயலாது.
சரித்திரம் நன்கு தெரிந்திருக்கிறது இந்திரா சௌந்தர் ராஜ னுக்கு. வார்த்தைகள் நன்கு வசப்படுகின்றன. கதை சொல்லும் உத்திகளில் புதுமையும் வேகமும் போட்டியிடுகின்றன அவரது வித்தக விரல்களில் தேர்ந்த சிற்பி ஒருவன் மலைகளில் சிற்பம் செதுக்குவதுபோல இவர் நம் மனங்களில் காட்சியைப் பதிவு செய்கிறார். கவித்துவம் மிக்க வர்ணனைகள் ஏராளம்.
பசுமையான மலைவளம் அதனுடே தேவதை போல் அலையும் காற்று’ எத்தனை அழகான கற்பனை பாருங்கள்.
புலித்தேவர், ஆற்காட்டு நவாப் முகம்மது அலி, மாபூஸ் கான்.
யூசுப்கான், விஜயரகுநாத சேதுபதி, ஹெரான் துரை போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் வந்தாலும் இது ஒரு முழுமையான வரலாற்று நாவலாக அமையவில்லையே என்ற குறை இல்லாம வில்லை. கற்பனைச் சம்பவம் ஒன்றின் மீது கதை பின்னப்பட் டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனாலும் இந்திரா சௌந்தர்ராஜன் எடுத்துக் கொண்டுள்ள சிறப்பான உத்தி, இந்தக் குறைகளை ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது.
மீனாட்சியின் சதங்கை காதுகளில் ஒலித்துக் கொண்டே மிருக்கிறது. ராஜேந்திரனின் காதலும் வீரமும் அவனுக்கு நேர்ந்த முடிவும் கண்கசியச் செய்துவிடுகிறது. நாவலைப் படித்து முடிக் கும் வரை நாமும் அப்படியே திரிகூடமலைக் காடுகளில் சஞ்ச ரித்துக் கொண்டிருக்கிறோம்.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.5 cm |
| Author | இந்திரா சௌந்தர்ராஜன் |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 304 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.