கடலும் கிழவனும்
Original price was: ₹99.00.₹90.00Current price is: ₹90.00.
Description
மீன்பிடி நுட்பங்கள் என்பது இக்கதையில் ஒரு தளம், அதைத்தாண்டி இக்கதை வாழ்க்கையை, அதன் இரக்கமற்ற தன்மையை, உறவுக்கான ஏக்கமும் வெல்ல முடியாத தனிமையையும், விளிம்புகளற்று நிரம்பியிருக்கும் சூனியத்தையும், வாழ்வின் நோக்கம் / சாரம் என்றும் நாம் சாதித்தவை என்றும் இறுமாந்திருக்கும் அனைத்தையும் கடித்துக் கிழிக்கும் கோரைப் பற்கள் கொண்ட காலத்தின் கருணையற்ற அகோர முகத்தினைக் காட்டும் கதை என்றும் வாசிக்கலாம். மனிதனும் இயற்கையும் கொள்ளும் உறவைப் பற்றிய தத்துவ விசாரணையாகவும் அணுகலாம். வேகமும் போட்டியும் நிறைந்த இவ்வுலகில் தன் அடையாளத்தை நிலைநாட்டத் துடிப்பவனின் கதை என்றும் சொல்லலாம். விவிலியப் படிமங்களை ஹெமிங்வே இக்கதையில் பெருவாரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். விவிலியத் தளத்திலும் ஒரு வாசிப்புச் சாத்தியம் தான். அவ்வளவு ஏன் பலனை எதிர்நோக்காத கர்மம் எனும் கீதையின் சாரத்தைச் சொல்லும் கதையாகக் கூட இதை வாசிக்க முடியும்.
– சுனில் கிருஷ்ணன்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author | எர்னெஸ்ட் ஹெமிங்வே தமிழில்: ச.து.சு.யோகியார் |
| Publisher | நேயர் விருப்பம் |
| Pages | 96 |
| Format | Paperback |
| ISBN | 9789392543456 |



Reviews
There are no reviews yet.