கலாப்ரியா கவிதைகள் – இரண்டாம் தொகுதி
Original price was: ₹580.00.₹522.00Current price is: ₹522.00.
Description
என் பதின்பருவம் முடியப்போகிற 1969இல், வாராய்! கவிதையாம் மணிப் பெயர்க் காதலி!” என்று மகாகவி பாரதி சொல்வது போல கவிதையை நானும் கவிதை என்னையும் ஒருவரையொருவர் தேர்ந்து கொண்டோம். இந்த அரை நூற்றாண்டின் முதல் முப்பதாண்டுகளில், அவ்வப்போது அதுவரை எழுதின. வெளியான அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து, ‘கலாப்ரியா கவிதைகள் என்ற தலைப்பில் ‘காவ்யா பதிப்பகம் (1994), ‘தமிழினி பதிப்பகம் (2000) ‘சந்தியா பதிப்பகம்’ (2013), ஆகியோரால் மூன்று முறை தொகை நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நூற்றாண்டுக்கு முந்திய அந்தியிலும் இதன் ஆரம்பத்திலும் அறிவியல் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் தமிழக இளைய தலைமுறையிடையே பெரும்பாய்ச்சலைக் கொண்டு சேர்த்தது. அதன் விளைவாக இதே காலகட்டத்தில் தமிழ்க்கவிதை உலகில் பல புதிய சிந்தனைகள், புதியமொழிதல்கள் கிளர்ந்துள்ளன. நான் எப்போதுமே, மூத்த எழுத்தாளர்களையும் புதிய வரவுகளையும் ஒரு சேர வாசிக்கும் பழக்கம் உள்ளவன். இரு சாராரிடமிருந்தும் பல செய்திகளைத் தெரிந்து கொள்வது தொடர்ந்து நிகழ்ந்ததும், புதிய வாசகர்களின் மாறுபட்ட சிந்தனைக்கும், என் மன மாற்றத்திற்கு மேற்ப எழுதப்பட்ட புதிய கவிதைகளை மனமுவந்து அவர்கள் வரவேற்றதுமே நான் நிறைய எழுத முடிந்ததன் உள்ளுறைக் காரணிகள்.
அப்படி இந்த நூற்றாண்டில் மலர்ந்த அந்த மஞ்சரிகள் அனைத்தும் ஒரு பலாக் கனியாக, ஒரு பெரிய தொகை நூலாக இப்போது உங்கள் வாசிப்பு மரத்தின் வேரில்.
Additional information
| Weight | 0.7 g |
|---|---|
| Dimensions | 3.2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 584 |
| Format | paperback |
| ISBN | 9788194418085 |



Reviews
There are no reviews yet.