காற்று வெளியினிலே

Original price was: ₹350.00.Current price is: ₹332.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

குங்குமம் வார இதழில் இந்த நாவலின் இரண்டு பாகங்களை நான் எழுதி முடித்தபிறகு வெளியிடப்பட்ட வாசகர் கடிதங்களில் ஒன்று – இந்த நாவல் எழுதியவரின் சுயசரிதத்தைப் பின்னணியாகக்கொண்டது என்று குறிப்பிட்டது.
இந்த நாவலை எழுதிவருகிறபொழுது வாராவாரம் படித்த பலர்கூட அப்படி ஒரு கருத்துத் தெரிவித்ததுண்டு.
நமது சமூக அரசியல் வாழ்க்கையை – அங்கு நான் அறிந்த மனிதர்களை எனது பிரக்ஞை தெளிந்த நாளிலிருந்து நான் அறிமுகம் செய்துகொண்ட முறையில் களமாகவும் பாத்தரங்களாகவும் ஆக்கி இந்த நாவலை எழுதியதனால் படிப்போர்க்கு அப்படி ஓர் எண்ணத்தை இது ஏற்படுத்தியிருக்கும். அவ்விதம் ஏற்படுத்துவதே எனது நோக்கம்.
எனது கற்பனைகளுக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளி அதிகமில்லை. கலை நோக்கங்களுக்காகவும் இலக்கிய பண்பு காக்கவும் யதார்த்தங்களிலிருந்து மேன்மை கருதிச் சற்றே எனது கற்பனை விலகி விடுவதுண்டு : எனினும் அவை பொய்கள் சார்ந்தவை ஆகிவிடுவதில்லை.
இந்த நாவல் என் சுயசரிதையை அடிப்படையாகக்கொண்டது என்பது யதார்த்தம் அல்ல: சமூக யதார்த்தம் சார்ந்த ஒரு கற்பனையின் விளைவே இந்த நாவல்.
இந்த நாவல் தொடங்குவது 1948-ல். அப்போது எனக்கு வயது பதினாலு. மெய்யாகவே கம்யூனிஸ்ட் கட்சியில் நான் வாழ்ந்திருந்தபோதிலும் ஈடுபடுவதற்கு ஓர் இளம்பிள்ளையின் சாகசப் பிரியத்துடன் புரட்சி இயக்கத்தில் நான் விரும்பியபோதிலும் கட்சித் தலைமை என் வயது கருதி புரட்சி என்னைப் பயன்படுத்திக்கொள்ளவே இல்லை. நடவடிக்கைகளில்
எழுதுபவனுக்கு ஏற்பட்டுவிடுகிற பொறுப்பு, அவனைப் பிறர் அனுபவத்தைத் தனதாக்கி எழுதுகிறபொழுது படைத்த பிரம்மாவுக்காவது இருக்குமா என்பது சந்தேகமே!
முளையிலேயே கருகிப்போயின என்பதனை ஒரு ஒரு காலத்து இளைஞர்களின் கனவுகள் எவ்வாறு குழந்தையின் கண்கொண்டு நான் பார்த்திருக்கிறேன். ஓர் எழுத்தாளனின் பார்வையில் எழுதியிருக்கிறேன்.
அக்காலத்தில் அந்தத் தலைமட்டமான வீழ்ச்சியை அவர்கள் எப்படியெப்படியோ சமாளித்துக் கொண்டார்கள். இன்றைக்கும்கூட அவர்கள் வியக்கத்தக்க அளவு சமாளித்து நிற்கிறார்கள். அந்த இளைஞர்களின் காதல்கள் கைகூடின அளவுக்குக்கூட அவர்களது லட்சியங்கள் கைகூடாததற்கு நாம் யாரைக் குறை சொல்ல முடியும்?
அவர்களது லட்சியங்கள் மேலானதாயிருந்தன; அவர்களது செயல்கள் அந்தரங்க சுத்தியோடு இருந்தன.
அவர்களது நடைமுறைகள் பெருந்தவறுகளாகப் பின்னர் நிருபிக்கப்பட்ட போதிலும் அந்தத் தவறுகளும்கூட அந்தரங்க சுத்தியோடு செய்யப்பட்டன என்பது நிரூபணமாயிற்று. எனினும் தவறுகள் அவர்களையும் சமூகத்தையும் பாதிக்கவே செய்தன.
இந்த நாவலைக் காலவாரியாகத் தேதியும் மாதமும் குறிப்பிட்டுக்கூட எழுதிவிடலாம். சமூக நிகழ்ச்சிகளின் பின்னணியில் எழுதப்பட வேண்டும் என்கிற ஒரு நாவலின் கட்டுமானத்தின் அந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு அந்தத் தேதிகளை அறிவிப்பதுதான் சிறப்பே தவிர நாம் அறிந்த தேதிகளையும் நிகழ்வுகளையும் சுற்றிக் கதை பண்ணுவது சரியில்லை என்று இந்த நாவலில் எனக்குத் தோன்றியது.1948-ம் ஆண்டு தொடங்கி 1960 வரை இரண்டு பாகங்கள் முடிகின்றன இந்நூலில்
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் கம்யூனிஸ்ட்கட்சி தடை செய்யப்பட்டது; அந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்குக்குள்ளாக விலக்கப்பட்டது என்கிற இரண்டு செய்திகளுக்கு நடுவே சுதந்திர இந்தியா குடியரசாகவும் ஆகியிருக்கிறது அல்லவா என்று வாசகரை யோசித்து அறிய வைக்க வேண்டுமென்பது என் இதற்கிடையே நம் அண்டை நாடான ஆசை சீனா, சோஷலிஸத்தைப் பிரகடனம் செய்ததும் இந்தக் கதை சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் விஷயம் மட்டுமல்ல. நமது காலம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் அது.
கதையைப் பொறுத்தவரை இது குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்தது என்பதற்கு இந்த விவரங்கள் அடையாளமாகின்றன.
வெறும் மனிதர்கள் கதாபாத்திரங்களாகிவிட முடியாது. அவர்கள் காதல் செய்வதனாலோ அல்லது காதல் செய்யாமல் இருப்பதனாலோ கதாபாத்திரங்களாகி விடுவதில்லை. அவர்களது சமூக சம்பந்தமே அவர்களது சமூகப் போராட்டமே வாழ்க்கையில் உழலும் இந்த வெறும் மனிதர்களைக் கதாபாத்திர அந்தஸ்துக்கு உயர்த்திவிடுகின்றன.
இந்தச் சமூக சம்பந்தத்தைக் குறித்துச் சுயப்பிரக்ஞை உடைய பாத்திரங்களை அதாவது இவர்களை உருவாக்குகிற எனக்கு நிகரான சமூகப் பிரஜைகளை நான் இந்த நாவலில் கதாபாத்திரங்களாக்கினேன்.
உண்மையாகச் சொல்லப்போனால் அந்த லட்சியவாதிகளின் பின்னால் ஒரு கதையும் இல்லை. அந்த மாபெரும் கனவுகள் தங்கள் வாழ்க்கையில் கைகூடவில்லையே என்கிற வருத்தம்தான் அவர்களுக்கு உண்டே தவிர அவை நிறைவேறப்போகிற கனவுகள் என்றும் நிறைவேறி வருகிற கனவுகள் என்றும் அவர்கள் சார்பில் உலகம் உணர்த்தவே செய்கிறது! எனவேதான் அவர்களால் மூச்சுவிட்டுக்கொண்டிருக்க முடிகிறது.
முடிவே இல்லாத கதையாக இதை எழுத நான் விரும்பினேன். இப்பொழுதும் கூட இது ஒரு முடிந்த கதை அல்ல. 1960-க்குப் பிறகும் இவர்கள் என்னோடு இன்றுவரை வாழ்கிறார்கள்.

Additional information

Weight 0.3 g
Dimensions 1.7 × 12 × 18 cm
Author

ஜெயகாந்தன்

Publisher

மீனாட்சி புத்தக நிலையம்

Pages

392

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “காற்று வெளியினிலே”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories