கு.ப.ரா சிறுகதைகள்
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
கு.பரா தன் கதைகளைப் பற்றி ” கதைப்புத்தகத்தை விரபிசனம் செய்தார் யாரோ ஒருவர் நாள் உடைந்த மனோரறங்கள், நிறைவேறா ஆசைகள்தீர்ந்த காதல்கள் இவற்றைப் பற்றித்தான எழுதுகிறேன் என்று எழதிய ஞாபகம் இது நான் குற்றவாளிதான் நான் கவனித்தவரையில் என அனுபவத்திஞம் வாழ்ககையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன.”
கு.ப. ராஜகோபாலனின் கதைகளை, அவை எழுதப்பட்டு சற்றே குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகமும் கதை நடத்தும் திறனும், உருவ, கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகரிலும் கூடச் சாத்தியமாக இருத்திருக்கிறது.
படித்துப் பார்த்து அனுபவித்து நினைவுபடுத்திக் கொள்பவர்களும் மீண்டும் ஒருதரம் படித்துப் பார்ப்பவர்களும் நம்மிடையே அதிர்ஷ்டசாலிகள் என்று நான் சொல்வேன்
– க.நா. சுப்ரமணியம்
கு.பராவின் கதைகளில் வரும் பெண்கள் எளிமையானவர்கள். அவர் படைத்த ஒரு பெண்ணாகிலும் ஓலமிட்டு அழுததேயில்லை. மௌனமாகக் கண்ணிர் வடிக்கும் பெண்களைத்தான் எழுதியிருக்கிறார். ஏழ்மை நிறைந்த நடுத்தர வாக்கத்து மனிதர்களைப் பற்றித்தான் அவரது கதைகள் பேசுகின்றன. கு.ப.ராவின் கதைகள் முழுவதையும் ஆராய்ந்தால் அனேகமாக அவர் பெண்களுக்காக மட்டுமே எழுதினார் என்று எண்ணத் தோன்றுகிறது.
– கரிச்சான் குஞ்சு
ராஜகோபாலனைப் போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகு கால ஆசை. அது நிறைவேற மறுத்துக்கொண்டே இருக்கிறது.
– விமலாதித்த மாமல்லன்
கு.பராவின் கதைகளில்தான் பெண்ணின் அகம் உண்மையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
– எஸ். ராமகிருஷ்ணன்
Additional information
| Weight | 0.6 g | 
|---|---|
| Dimensions | 2.5 × 14 × 21.6 cm | 
| Author | கு.ப.ரா | 
| Publisher | முயற்கூடு பதிப்பகம் | 
| Pages | 512 | 
| Format | paperback | 
| ISBN | 9788195558476 | 



 
                         
                         
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
Reviews
There are no reviews yet.