சிற்றெறும்பின் நிழல்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
ஒருவர் தீவிரமாக காதலில் விழுவதற்கும் ஒரு பெரு நகரத்தில் வாழ நேர்வதற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே அவை அளிக்கிற அதீத இன்பங்களாலும் அதீத துன்பங்களாலும் ஒருவரை அலைக்கழிக்கின்றன. எங்கும் செல்லாத இடுகிய நீண்ட வளைந்து வளைந்து செல்லும் தெருக்கள், முட்டுச் சந்துகள் அல்லது ஒரே ஒரு தவறான திருப்பத்தால் ஒருவர் வெரு தூரம் விலகிப் போய்விடுவது இவை எல்லாமே இரண்டிலுமே நிகழ்கின்றன. இந்தத் திகைப்பு, திசையழிவு விஜயகுமாரின் இந்தக் கவிதைகளில் திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப்படுகிறது. ஒருவர் ஆயிரத்தெட்டாவது கடைசி சிகரெட்டைப் பிடித்தபடி எப்போதும் எதற்கோ காத்திருக்கிறார். எதற்கு? ஒரு காதல் சொல்லப்படுவதற்கு; ஒரு வேலை கிடைப்பதற்கு; ஒரு மன்னிப்பு ஒப்புக் கொள்ளப்படுவதற்கு; நூறு ரூபாய் கடன் கிடைப்பதற்கு; ஒரு முத்தம் தரப்படுவதற்கு; ஒரு சனிக்கிழமை மாலை அரைக்குப்பி மது பகிரப்படுவதற்கு
அற்ப விஷயங்கள் அனுபவப்படக் கூட ஒருவர் அரும்பாடு படவேண்டியுள்ளது. அவை அற்ப விஷயங்கள் என்று அறிந்துகொண்டே அவற்றுக்காக சிலுவையில் தொங்குகிற கவி உணர்கொம்புகள் மிகக் கூர்ந்த ஒரு மனதின் கூக்குரல்கள் இவை. மொழியும் உணர்வும் கூர்ந்துவரும் புதிய கவிகள் இன்று அபூர்வம். விஜயகுமாரின் கவிதைகளில் இரண்டுமே இயைந்து வந்திருக்கிறது. ஹராகிரி செய்யும் முன்பு ஒரு சாமுராய் தன் வாளை எவ்வளவு கூர்மையாகத் தீட்டுவான்? அதே கவனத்துடன் உணர்வுத் தீவிரத்துடன் எழுதப்பட்டிருக்கிற கவிதைகள் இவை.
– போகன் சங்கர்
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author | சோ.விஜயகுமார் |
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN | 9789387636569 |



Reviews
There are no reviews yet.