சீவக சிந்தாமணி
Original price was: ₹175.00.₹156.00Current price is: ₹156.00.
Description
தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு.நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும். முன்னோடியாகவும் அமைந்துள்ள பெருமையுடையது. கம்பராமாயணம்,
சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல். போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள்,மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான LIRI செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. சீவகள் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. திருத்தக்க தேவர் தம் நூலுக்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயரிட்டனர்.
சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார். திருத்தக்க தேவர்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 172 |
| Format | paperback |
| ISBN | 9788198623607 |



Reviews
There are no reviews yet.