தந்தையும் தனயர்களும்
Original price was: ₹290.00.₹275.00Current price is: ₹275.00.
Description
பஸாரவ் வாயிலுக்கு முன் சற்று நேரம் நின்றான். பின்பு திடீரென்று. த்தூ, சைத்தான்’ எவ்வளவு அழகு. எவ்வளவு அபத்தம்! நல்ல நகைச்சுவை நாடகந்தான் நடத்துகிறோம்! பயிற்றப்பட்ட நாய்கள் இப்படித்தான் பின்னங்கால்களில் நாட்டியம் ஆடும். ஆனால் மறுப்பது முடியாதிருந்தது. மறுத்திருந்தால் அவர் என்னை அடித்திருப்பார். இந்த எண்ணம் தோன்றியதுமே பஸாரவ் வெளிறிப் போனான். “அப்போது பூனைக்குட்டிபோல அவர் கழுத்தை நெரிக்க நேர்ந்திருக்கும் என்று சொல்லிக் கொண்டான். தன் மைக்ராஸ்கோப்புக்குத் திரும்பினான். ஆனால் அவனுடைய இதயம் சஞ்சலம் அடைந்தது. கவனம் செலுத்துவதற்கு இன்றியமையாத நிம்மதி போய்விட்டது. “இவர் இன்று எங்களைப் பார்த்துவிட்டார். ஆனால் தம்பிக்குப் பரிந்துகொண்டா இவர் இப்படிச் செய்கிறார்? தவிர, என்ன பிரமாதம், ஒரு முத்தம்? இதில் வேறு ஏதோ மர்மம் இருக்கிறது. ஆ! இவரே இவளைக் காதலிக்கிறாரோ ஒருவேளை? காதலிக்கிறார் என்பது தானே தெரிகிறதே. பட்டப்பகல்போல வெளிச்சமாய் இருக்கிறது இது. அட என்ன தொல்லை! படுமோசம். எந்தப் புறமாகப் பார்த்தாலும் படுமோசம். தலை தப்பினாலும் இங்கிருந்து வெளியேற வேண்டும்.
-நாவலிலிருந்து…
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.5 cm |
| Author | ஆசிரியர்: இவான் துர்கனேவ் தமிழில்: பூ. சோமசுந்தரம் |
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Pages | 312 |
| Format | paperback |
| ISBN | 9788194966623 |



Reviews
There are no reviews yet.