தாய்
Original price was: ₹250.00.₹249.00Current price is: ₹249.00.
Description
குடிகாரத் தந்தையின் கொடுந்தாக்குதலுக்கு ஆளான தாய் ரஷ்யாவில் மட்டுமா இருக்கிறார்? அந்தந் தாயின் துயர் பொறுக்க முடியாமல் குடிகார முரட்டுத் தந்தைக்கு எதிராகக் கை நீட்டும் மகன் ரஷ்யாவில் மட்டுமா இருக்கிறான்? ஒரு தொழிற்சாலை நான்காக. பத்தாக மாறும். ஆனால், உழைக்கும் தொழிலாளி உருக்குலைந்து புதைப்பதற்கான ஒரு துண்டு நிலமுமில்லாமல் ஒன்றுமில்லாமல் சாவது ரஷ்யாவில் மட்டுமே நிகழ்ந்ததா? இன்னும் சொல்லப்போனால் அங்கு பிணத்தை எந்த வழியில் கொண்டு போவது, அதை எரிக்கவோ, புதைக்கவோ தனி சுடுகாடு என்கிற பிரச்சனைகள் இல்லாத நிலம். அதே நேரம் உழைக்கும் மக்களைச் சுரண்டுகிற போக்கில் ஒரு மாற்றமும் இல்லை என்பதுதான் புதினம் எழுதப்பட்ட காலத்தின் நிலை. ஆனால், இன்று ரஷ்யாவில், ஐரோப்பாவில், அமெரிக்காவில் நிலைமைகள் நிச்சயம் முன்னிலும் மாற்றமடைந்திருக்கின்றன எப்படி ? ஆனால். ஒப்பீட்டளவில் இந்தியாவில் அல்லது குறிப்பாகத் தமிழகத்தின் நிலையென்ன? இன்றும் ஏறக்குறைய அதேதான். சில அறிவாளிகள் சொல் வதுபோலத் தாய் நாவல் இன்று சீனாவுக்கோ, ரஷ்யாவுக்கோ அல்லது நாடுகளுக்கோ ஐரோப்பிய தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், நமக்கு மிக அவசியமானதொரு புதினம் என்பதை வாசகரால் உணர முடியும்.
Additional information
| Weight | 0.7 g |
|---|---|
| Dimensions | 2.8 × 14 × 21.4 cm |
| Author | ஆசிரியர்: மாக்சிம் கார்க்கி தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன். |
| Publisher | சீர் வாசகர் வட்டம் |
| Pages | 576 |
| Format | Paper back |




Reviews
There are no reviews yet.