தினம் ஒரு உயிர்
Original price was: ₹390.00.₹370.00Current price is: ₹370.00.
Description
தினம் ஒரு உயிர்!
இந்தத் தலைப்பைக் கேட்டதும் சரியான தடாலடி மர்மக் கதையாக இது இருக்கும் என்கிற ஒரு எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். அப்படித் தோன்றினால் மிக நல்லது என்கிற எண் ணம்கூட இந்தத் தலைப்பை நான் அமைக்க ஒரு காரணம்.
இன்றைக்கு புத்தகம் படிப்பவர்கள் அருகி வருகிறார்கள். ஆனால் தொலைக்காட்சி, சினிமா போன்ற ஒளிப்புனலைப் பார்ப் பவர்களோ பெருகி வருகிறார்கள்.
படிப்பது என்பது நாமாகப் பிசைந்து நமது கைகளால் முயன்று சாப்பிடுவது போன்றது. பார்ப்பது என்பது அப்படி இல்லை. அது கிட்டத்தட்ட ஊட்டப்படும் சோறு. நாம் கண்ணைத் திறந்து கொண்டிருந்தாலே போதும். அதன் வழியாகக் கதையானது காட்சிப் பொருளாகவே உள்ளே நுழைந்து நம்மை ஆக்ரமித்துக் கொண்டு விடும். 1990க்கு முன் வரை இந்த ஊடகங்கள் தமிழகத் தில் இல்லாத நிலையில் நம் சமுதாயம் பொழுதுபோக்கு விஷயத் தில் ஊட்ட ஆளில்லாத நிலையில் தானாகவே பிசைந்து முயன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. (அதுதான் நல்லதும்கூட) பின் னாளில் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது. இன்றைக்கு ஒன்றுக்கு நாற்பது சேனல்கள். அதில் 24 மணி நேரமும் நம்மை அப்படி இப்படி நகரவிடாதபடி காட்சி ஓட்டங்கள்.
இதில் வாராந்திர மெகா சீரியல்களின் ஆதிக்கம் ஒருபுறம் என்றால், விஞ்ஞானபூர்வமான, நாம் தவமிருந்தாலும் பார்க்க இயலாது என்று கருதும் காட்சிகளை, நம் கண்ணுக்கு விருந்தாக் கும் ஜாக்ரஃபி சேனல், டிஸ்கவரி சேனல் போன்றவை ஒருபுறம்.
இதனால் உலகமும் மிகச் சுருங்கிவிட்டது. எங்கே எது நடந்தா லும் அடுத்த ஷணம் நம் வீட்டுச் சின்னத்திரை அதைக் காட்டி, எப்படி என் சாமர்த்தியம் என்று கேட்கிறது.
இது ஒரு விஞ்ஞான வளர்ச்சி, தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயமும்கூட. ஆனால் இந்த வளர்ச்சி மிதித்துக்கொண்டிருப்பது மனித மனங்களின் கற்பனைக்கும், சிந்தனை ஆற்றலுக்கும் பெருமளவு காரணமாக இருக்கும் வாசிக்கும் பழக்கத்தின் மேல்தான் என்பது பெரிய கொடுமை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் எனக்குத் தெரிந்து 20 வயதுக்குக் கீழ் கதை படிக்கும் பழக்கம் கொண்ட வாசகர்களே இல்லை எனலாம். அன்று ஏராளமான கதை படித்தவர்கள்கூட இன்று டி.வி. சீரியல்களின் பக்கம் திரும்பிவிட்டனர். குறிப்பாக பெண்கள் புத்தகத்தைக் கட்டிக் கொண்டு அழுத காலம் மலையேறிப் போய்விட்டது.
இது நல்லதா கெட்டதா என்கிற வாதம் ஒருபுறம் இருக்கட்டும். நான் அதற்குள் நுழைய விரும்பவில்லை. ஒரு எழுத்தாளனால் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு சவால் விடுவதாய் இன்றைய காலகட்டம் இருப்பதைச் சொல்லவே இந்தப் பீடிகை.
இப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் வார, மாத இதழ்களி லும் பெரிய அளவில் வடிவ மாற்றங்கள்! முன்பு போல இப்போது பாகம் பாகமாய் எழுத முடியாது.
ஆறு வாரத் தொடர், நான்கு வாரத் தொடர் என்று தொட ருக்கு அறிவிக்கும்போதே இலக்குகளை நிர்ணயித்துவிடுகிறார் கள். இதில் ஒரு எழுத்தாளர் அதிகபட்சம் 20 முதல் 24 வாரம் வரை எழுதினாலே அது பெரிய வெற்றி. இதில் பத்திரிகைகளின் பிழை எங்கேயும் இல்லை. காட்சிக்கும் எழுத்துக்குமான யுத்தத்தில் எழுத்து உதைபடும் நிலையில் அது உதை படாமல் காப்பாற்றப் பட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் எனக்குள் கேட்டுக்கொண்டேன். அதன் எதிரொலிகள்தான் என் நாவல்கள். காட்சிகளில் கிடைக்கும் சுவைக்கு ஈடான விஷயங் களையும், சிந்திக்கத் தூண்டும் மறைஞான விஷயங்களையும் உள்ளடக்கி அதற்கேற்ப கதைக் கருவை தேர்வு செய்து அதை உரிய சஸ்பென்சுடன் இழுத்துச் செல்லும்போது வாசகன் அதை கெட்டியாகப் பற்றிக் கொள்கிறான்.
இந்த ‘தினம் ஒரு உயிர்’ தொடரிலும் அது நடந்தது. மிக வெற்றிகரமாகவே அது நடந்தது என்றால் மிகையே இல்லை. அதனாலேயே 51 வாரங்கள் எழுத எனக்கு வாய்ப்பும் கிட்டியது. 50 ஆவது வாரம்வரை இதை ஒரு முடிவை நோக்கிச் செல்லும் தொடராகவே யாரும் கருதவில்லை. 51 ஆவது தொடர் முடியவும் என்ன இது இத்தனை சீக்கிரம் முடித்துவிட்டீர்களே என்று பலர் கேட்டபோது மகிழ்வாக இருந்தது.
நல்ல பேச்சுக்கு இலக்கணம், இவர் இன்னமும் பேச மாட்டாரா என்று ஏங்கும்போது பேச்சை முடித்துக் கொள்வது. அது இந்த தொடருக்கும் பொருந்திற்று.
இது தொடராய் தொடங்கப்பெற்ற நாளில் இது உருவாக்கப் போகும் பாதிப்பைப் பற்றி நான் பெரிதாக கற்பனைக் கோட்டை கட்டவில்லை. நிச்சயம் ஓடி ஜெயிக்கும் ஒரு குதிரை இது என்று மட்டுமே நம்பினேன். ஆனால் இது எனக்கு ஜாக்பாட் பரிசினையே அள்ளித் தந்துவிட்டது.
ஒவ்வொரு வாரமும் பல வாசகர்கள் இத்தொடர் குறித்து என்னிடம் விவாதங்களை மேற்கொண்டார்கள். எங்கோ எதற்கோ போன இடத்தில் கூட இத்தொடரின் நாயகனான அரங்கநாதன் பற்றி என்னைக் குடைந்தவர்கள் உண்டு.
சிலர் வீடு தேடி வந்து இது உண்மைக் கதையா, இதை எழுதும் நான் ஒரு முதிர்ந்த கிழவனா என்றெல்லாமும் ஆராய்ந் தார்கள்.
தொலைக்காட்சி ஒன்று என்னை ஒரு நேர்முகப் பேட்டி கண்டது. அதில் நான் நேயர்களின் தொலைபேசிக் கேள்வி களுக்கு பதில் கூறினேன். பொதுவான அந்த நிகழ்ச்சியிலும் இந்தத் தொடரின் அரங்கநாதன் நுழைந்துவிட்டான்.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.5 cm |
| Author | இந்திரா சௌந்தர்ராஜன் |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 376 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.