திருவண்ணாமலை
Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
Description
இந்த நூலில் உள்ள நாவல் நான் அஷ்டமா சித்தி வரிசை யில் இறுதியாக எழுதியது.
‘அணிமா, மகிமா, இலஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம். வசித்வம், ஈசாத்வம்’ என்று எட்டு சக்திகளை நமது ஆன்மிக சாதகர்களும் யோகிகளும் அஷ்டமா சித்திகளாக குறிப்பிடுகிறார்கள்.
இந்த எட்டையும் ஒருசேர அடைந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஒரு கற்பனை செய்து பார்த்தால் நடப்பு உலகில் ஒருவருமே கண்ணில் படவில்லை. காஞ்சி பரமாச்சாரியாரை ஒரு அஷ்டமா சித்தி வசப்பட்ட அருளாளராக நான் எண்ணிப் பார்க்கிறேன். ஆனாலும் அவற்றை அவர் பயன்படுத்தியதைப் பார்த்தவர்கள் இல்லை.
நானறிந்தவரை எட்டு சித்திகளில் எட்டாவதான ஈசத்வத்தை அடைந்தவர்கள் எந்த நிலையிலும் மீதமுள்ள ஏழு சித்திகளை பயன்படுத்துவதில்லை. அதற்கு அவர்கள் வாழ்வில் அவசியங்களும் இல்லாமல் போய் விடுவதே உண்மை.
பிள்ளையாக இருக்கும் போது பாண்டி விளையாடியவர்கள் முதுமையில் அதை எண்ணி வேண்டுமானால் பார்ப்பார்கள். ஆனால் ஒருக்காலும் மீண்டும் பிள்ளைகளுடன் வந்து அதை எப்படி ஆடிப் பார்க்க மாட்டார்களோ அப்படித்தான் இதுவும். பொதுவில் அஷ்டமாசித்து வரிசை நாவல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன.
அஷ்டமாசித்து பற்றி அறியாதவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இந்த நாவல்கள் அமைந்ததாக பலர் குறிப்பிட்டனர்.நமது இந்து மதத்தின் வலிமையை குறிப்பாக ஆன்மிக வலிமையை உணர இந்த நாவல்கள் துணை செய்ததாக கூறியவர்களும் உண்டு.
இந்த நாவலின் களம் திருவண்ணாமலை!
அதையே தலைப்பாகச் சூட்டியுள்ளேன்.
கதையின் நாயகன் ஈசத்வத்தை பிறப்பிலேயே அடைந்துவிட்ட அவன் செயல்பாடுகளும் ஒருவன். அதற்கேற்பவே அமைந்துவிட்டன.
மறைமுகமாக திருவண்ணாமலை பற்றி அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கும் இந்நூல் சிறிதளவு துணை செய்யலாம்.
இந்திய மண்ணில் அது ஒரு மர்ம பூமி. ஏராளமான சித்தர்கள் புதைந்து போய் அருள் உடம்போடு வலம் வந்தப்பு இருக்கும் ஒரு விசித்ர பூமி அது. புராணப்படி அது அக்னிஸ்தலம்
அங்குள்ள அண்ணாமலையின் பெருங் கருணையே நாள் இதை எல்லாம் எழுதவும் காரணம்.
இந்த நாவல் வரிசையைத் தொடர்ந்து நான் தொட்டிருப்பது சப்தகன்னியர்களை… ஸ்ரீ சக்தியின் உபதேவியர்களான இவர்கள் பற்றியும் கதைப் போக்கில் நாவல்கள் வர இருக்கின்றன. அதையும் வாங்கிப் படியுங்கள்.
சிறப்பான முறையில் இதைக் கொண்டு வந்திருக்கும் திருமகள் நிலையத்தாருக்கு என் நன்றி.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12 × 18 cm |
| Author | இந்திரா சௌந்தர்ராஜன் |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 192 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.