தூண்டில் கதைகள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது தோன்றும் வரை வாரப் பத்திரிகைகள் வாரா வாரம் வடிவம் மாறாமல் இருந்தன. பொருளடக்கம், கார்ட்டூன். தலையங்கம் தொடர்கதை இப்படி ‘மெனு’ மாற்றாமல் இடம் பிசகாமல் அளித்து வந்த ‘கல்கி”ஆனந்த விகடன்’ பத்திரிகை களைக் கலைக்க வந்தது குமுதம். இந்த இடத்தில் இதுதான் தரவேண்டும் என்கிற புனிதத்தை மாற்றி, வாராவாரம் ஒரு எதிர் பாராத அம்சத்தை எதிர்பார்க்கும் புதுமையைக் கொண்டு வந்தது. சினிமா விமர்சனம், ஆறு வித்தியாசம், அரசு பதில்கள், சாண்டில்யன் சரித்திரக் கதைகள் போன்ற சாகாத விஷயங்கள் உட்பட எல்லாம் வாராவாரம் இடம் மாறின, வடிவம் மாறின. விடுபட்டன, மீண்டும் புத்துயிர் பெற்றன, சுருங்கின, விரிந்தன. இந்த வெட்டுவதும் சேர்ப்பதுமே ஒரு பத்திரிகைப் பணியாக மாறி, குமுதத்திற்குப் பின் வந்த அத்தனைப் பத்திரிகைகளும் அதே ஃபார்மாட் அமைப்பைக் கடைப்பிடித்து “வெற்றியைப் போல் வெற்றி தருவது ஏதுமில்லை” என்ற சொல்லுக்கேற்ற குமுதம் ஃபார்முலா அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்பத்திரிகை ஃபார்முலாவாகியது.
இதில் முக்கியமாக அடிபட்டது சிறுகதைதான். பத்துப்பக்கம் ஒரு கதாசிரியர் மாய்ந்து மாய்ந்து எழுதியதை ஒரு பக்க அளவுக்கோ அல்லது ஒரு படக்கதையாகவோ சுருக்க குமுதம் தயங்கவில்லை. அவற்றின் தலைப்புகள் மாறின. பெயர்கள் மாறின. வருணனைகள் மாயமாய் மறைந்தன. அத்தனை சிதைவு களையும் கதைகளை எழுதினவர்கள் மௌனமாகத் தாங்கிக் கொண்டிருந்தற்குக் காரணம் குமுதம் பத்திரிகையின் பிரபலமும் அதன் வீச்சும் பரபரப்பும்தான். குமுதத்தில் கதை வருவது என்பதற்கு ஒரு தனி மதிப்பு இருப்பதாக சமீபத்தில் ஒரு பிரபல கதாசிரியர் தன் அவசரப்பட்ட சுயசரிதையில் எழுதியிருந்தார். என் ஆரம்ப காலக் கதைகள் சற்று இந்த இம்சைகளுக்கு உட்பட்டாலும், ஒரு கட்டத்திற்குப் பின் எஸ்.ஏ.பி.யும், ரா.கி. ரங்கராஜனும் என்னிடம் ஏதோ ஒரு நம்பிக்கை ஏற்பட்டுவைத்தேன்.சில முன்னுரை கித் தனங்களே போதும் என்று விட்டிருக்கலாம். அதனால் சும்மாவிட்டு விட்டார்கள். ஒருவேளை நான் செய்த கோணங் என்னால் குமுதத்தில் பலவிதமான சோதனைகளைச் செய்த பார்க்க முடிந்தது. ஒரு கதையில் இரண்டு சுதை எழுதிவே ஒரு முடிவைச் சுற்றி வளைத்து ஆரம்பத்தோடு ஒட்ட அனைத்தையும் குமுதம் அனுமதித்தது. சுவாரஸ்யமாக கதை சில எழுத்து விசித்திரங்கள் பண்ணிப்பார்த்தேன், சொல்ல வேண்டும் என்கிற ஆதார குறிக்கோளிலிருந்து நாள் அவர்கள் சகித்துக் கொண்டார்கள். அனுமதித்தார்கள் என்று விலகாமல் இருந்ததால், இந்த மாதிரி வேறுபாடுகளையெல்லாம் சொல்லலாம். நாட்பட நாட்பட சிறுகதைப் பழக்கமே பத்திரிகை களில் மருகி துணுக்கு என்னும் பொட்டலச் செய்தி ஆக்கிர மிக்கத் துவங்கியது. இதற்கும் குமுதம் ஒருவாறு காரணம் இன்றைக்கு துணுக்குகளை முழுதும் நம்பியே மூன்று நான்கு பத்திரிகைகள் இருப்பது தமிழ்ப் பத்திரிகையுலகின் பிரத்தியேக விந்தை, அப்புறம் தொடர்கதை, தொடர்கதை என்னும் புதிய வடிவம் இதுவும் தமிழ்ப்பத்திரிகையுலகின் தனிப்பிள்ளை, நாவல் அல்ல தொடர்கதை. வாராவாரம் எழுதப்பட்டு ப்ளாட் அவை யும் வினோத நாடோடிக்கதை.இதன் முக்கிய குறிக்கோள் ஒரு கெட்ட பழக்கம்போல வாசகரோடு ஒட்டிக்கொண்டு, வாரா வாரம் பத்திரிகையை வாங்கவைக்க வேண்டும். வார இறுதியில் ஏதாவது ஒரு உச்ச கட்டம் வேண்டும். குறிப்பிட்ட வருஷப் பிறப்பில் தீபாவளி, சுதந்திர தின இதழ் என்று ஆரம்பிக்க வேண்டும். மற்றொரு சிறப்பிதழில் முடிவு பெற வேண்டும் அதற்குப் படம் போடவென்று நான்கு சித்திரக்காரர்கள் உண்டு. யார் படம் போடுகிறார்கள் என்று வாசகர் போட்டி கூட இருக்கலாம். கதை வருமுன் ‘ஓ என் அபிமான எழுத்தாளர் எழுதுகிறாரா. ஜெ படம் போடுகிறாரா பேஷ் பேஷ் விலையை ஏற்றுங்கள். தாங்கிக் கொள்கிறோம்’ என்று வாசகர் கடிதம் எல்லாமே தமிழ் கூறும் நல்லுலகத்தின் இலக்கிய சிந்தனைகள் மங்கி ஒரு அவசரக் போக்கும் மேம்போக்கும் எங்கும் பரவிக் கொண்டிருப்பதற்கான அடையாளங்கள்.
இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் எனக்கு சட்டென்று ஏன் பழைய மாதிரி க்ளாஸிக்கல் பாணியில் ஜெஃப்ரே ஆரச்சர் போல பல இடங்களை வைத்து பல விதமான பாத்திரங்களை அமைத்து ஒரு வகையில் சிறுகதை வடிவச் சிதைவுகளுக்கு பிராயச்சித்தமாக விஸ்தாரமாக ஒரு பத்து பன்னிரண்டு கதைகள் எழுதக் கூடாது என்று தோன்றியது.
இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது தோன்றும் வரை வாரப் பத்திரிகைகள் வாரா வாரம் வடிவம் மாறாமல் இருந்தன. பொருளடக்கம், கார்ட்டூள். தலையங்கம் தொடர்கதை இப்படி ‘மெனு’ மாற்றாமல் இடம் பிசகாமல் அளித்து வந்த ‘கல்கி’ ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை களைக் கலைக்க வந்தது குமுதம். இந்த இடத்தில் இதுதான் தரவேண்டும் என்கிற புனிதத்தை மாற்றி, வாராவாரம் ஒரு எதிர் பாராத அம்சத்தை எதிர்பார்க்கும் புதுமையைக் கொண்டு வந்தது. சினிமா விமர்சனம், ஆறு வித்தியாசம், அரசு பதில்கள். சாண்டில்யன் சரித்திரக் கதைகள் போன்ற சாகாத விஷயங்கள் உட்பட எல்லாம் வாராவாரம் இடம் மாறின, வடிவம் மாறின. விடுபட்டன. மீண்டும் புத்துயிர் பெற்றன. சுருங்கின, விரிந்தன. இந்த வெட்டுவதும் சேர்ப்பதுமே ஒரு பத்திரிகைப் பணியாக மாறி, குமுதத்திற்குப் பின் வந்த அத்தனைப் பத்திரிகைகளும் அதே ஃபார்மாட் அமைப்பைக் கடைப்பிடித்து “வெற்றியைப் போல் வெற்றி தருவது ஏதுமில்லை” என்ற சொல்லுக்கேற்ற குமுதம் ஃபார்முலா அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்பத்திரிகை ஃபார்முலாவாகியது.
இதில் முக்கியமாக அடிபட்டது சிறுகதைதான். பத்துப்பக்கம் ஒரு கதாசிரியர் மாய்ந்து மாய்ந்து எழுதியதை ஒரு பக்க அளவுக்கோ அல்லது ஒரு படக்கதையாகவோ சுருக்க குமுதம் தயங்கவில்லை. அவற்றின் தலைப்புகள் மாறின. பெயர்கள் மாறின. வருணனைகள் மாயமாய் மறைந்தன. அத்தனை சிதைவு களையும் கதைகளை எழுதினவர்கள் மௌனமாகத் தாங்கிக் கொண்டிருந்தற்குக் காரணம் குமுதம் பத்திரிகையின் பிரபலமும் அதன் வீச்சும் பரபரப்பும்தான். குமுதத்தில் கதை வருவது என்பதற்கு ஒரு தனி மதிப்பு இருப்பதாக சமீபத்தில் ஒரு பிரபல கதாசிரியர் தன் அவசரப்பட்ட சுயசரிதையில் எழுதியிருந்தார். என் ஆரம்ப காலக் கதைகள் சற்று இந்த இம்சைகளுக்கு உட்பட்டாலும், ஒரு கட்டத்திற்குப் பின் எஸ்.ஏ.பி.யும், ரா.கி. ரங்கராஜனும் என்னிடம் ஏதோ ஒரு நம்பிக்கை ஏற்பட்டு சும்மாவிட்டு விட்டார்கள். ஒருவேளை நான் செய்த கோளம் கித் தனங்களே போதும் என்று விட்டிருக்கலாம். அதனால் என்னால் குமுதத்தில் பலவிதமான சோதனைகளைச் செய்து பார்க்க முடிந்தது. ஒரு கதையில் இரண்டு கதை எழுதினேன். ஒரு முடிவைச் சுற்றி வளைத்து ஆரம்பத்தோடு ஒட்ட வைத்தேன். சில எழுத்து விசித்திரங்கள் பண்ணிப்பார்த்தேன் அனைத்தையும் குமுதம் அனுமதித்தது. சுவாரஸ்யமாக கதை சொல்ல வேண்டும் என்கிற ஆதார குறிக்கோளிலிருந்து நான் விலகாமல் இருந்ததால், இந்த மாதிரி வேறுபாடுகளையெல்லாம் அவர்கள் சகித்துக் கொண்டார்கள். அனுமதித்தார்கள் என்று சொல்லலாம். நாட்பட நாட்பட சிறுகதைப் பழக்கமே பத்திரியை களில் மருகி துணுக்கு என்னும் பொட்டலச் செய்தி ஆக்கிர மிக்கத் துவங்கியது. இதற்கும் குமுதம் ஒருவாறு காரணம் இன்றைக்கு துணுக்குகளை முழுதும் நம்பியே மூன்று நான்கு பத்திரிகைகள் இருப்பது தமிழ்ப் பத்திரிகையுலகின் பிரத்தியேக விந்தை, அப்புறம் தொடர்கதை, தொடர்கதை என்னும் புதிய வடிவம் இதுவும் தமிழ்ப்பத்திரிகையுலகின் தனிப்பிள்ளை. நாவல் அல்ல தொடர்கதை. வாராவாரம் எழுதப்பட்டு ப்ளாட் அலை யும் வினோத நாடோடிக்கதை. இதன் முக்கிய குறிக்கோள் ஒரு கெட்ட பழக்கம்போல வாசகரோடு ஒட்டிக்கொண்டு, வாரா வாரம் பத்திரிகையை வாங்கவைக்க வேண்டும் . வார இறுதியில் ஏதாவது ஒரு உச்ச கட்டம் வேண்டும். குறிப்பிட்ட வருஷப் பிறப்பில் தீபாவளி, சுதந்திர தின இதழ் என்று ஆரம்பிக்க வேண்டும். மற்றொரு சிறப்பிதழில் முடிவு பெற வேண்டும். அதற்குப் படம் போடவென்று நான்கு சித்திரக்காரர்கள் உண்டு யார் படம் போடுகிறார்கள் என்று வாசகர் போட்டி கூட இருக்கலாம். கதை வருமுன் ‘ஓ என் அபிமான எழுத்தாளர் எழுதுகிறாரா, ஜெ படம் போடுகிறாரா பேஷ் பேஷ் விலையை ஏற்றுங்கள். தாங்கிக் கொள்கிறோம்’ என்று வாசகர் கடிதம் எல்லாமே தமிழ் கூறும் நல்லுலகத்தின் இலக்கிய சிந்தனைகள் மங்கி ஒரு அவசரக் போக்கும் மேம்போக்கும் எங்கும் பரவிக் கொண்டிருப்பதற்கான அடையாளங்கள்.
இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் எனக்கு சட்டென்று ஏன் பழைய மாதிரி க்ளாஸிக்கல் பாணியில் ஜெஃப்ரே ஆரச்சர் போல பல இடங்களை வைத்து பல விதமான பாத்திரங்களை அமைத்து ஒரு வகையில் சிறுகதை வடிவச் சிதைவுகளுக்கு பிராயச்சித்தமாக விஸ்தாரமாக ஒரு பத்து பன்னிரண்டு கதைகள் எழுதக் கூடாது என்று தோன்றியது.
ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களுக்கு போன் செய்து சொன்ன போது, அவர் தாராளமாகச் செய்யுங்கள் என்றார். அந்த வகையில் நான் எழுதிய கதைகள் இவை. சம்பிரதாயமான பழைய கால சிறுகதைவடிவம். முடிவில் ஒருசொடக்கு அல்லது துடிப்பு இவைதான் இந்தக் கதைகளின் பொது அம்சம். இதைப் படிப்பவர்கள் இவை இலக்கியமா இல்லையா என்று கவலைப் பட வேண்டியதில்லை. உற்சாகமாக, சுலபமாகப் படிக்கமுடியும்.
இந்தக்கதைகளை குமுதத்தில் திருத்தாமல் வெளியிட்டாலும், ஒரு கதை முடிய மற்றொரு கதை துவங்கும் படியாக பகுதி பகுதியாகப் பிரித்துத்தான் வெளியிட்டார்கள். அதற்குக் காரணம் தொடர்கதை கதை தோஷம் என்றுதான் சொல்வேன். இப்படி ஒருகதை மூலம் மற்றொரு கதைக்கு இழுத்ததாலோ என்னவோ இவைகளுக்கு “தூண்டில் கதைகள்” என்று குமுதம் பெயரிட்டது. புத்தக வடிவில் இப்போது வந்து விட்டதால், நீங்கள் விரும்பிய கதையைத் தேர்ந்தெடுத்து விரும்பிய நேரத்தில் படிக்கலாம்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14 × 21.5 cm |
| Author | சுஜாதா |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 200 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.