நந்திபுரத்து நாயகன்
Original price was: ₹330.00.₹313.00Current price is: ₹313.00.
Description
பல்லவத்தின் பொக்கிஷமான பெருமாண்பு விருதும் வெண்கொற்றக்குடையும் நந்தியின் கைசேர்ந்தது. பறிபோனவை மீட்கப்பட்டதும் சங்கநாதம் செய்து கர்ஜித்தான் நந்திவர்மன்.
கங்கனின் மானம் காற்றில் பறக்க. அது தோல்வியின் எதிரொலியாக சோக கீதம் இசைத்து ஸ்ரீபுருஷரின் நெஞ்சில் ரணமாக வலித்தது. கங்கபாடி ஆறாயிரம் நந்திவர்மனின் ரிஷபக் கொடியை வானுயர பறக்கவிட்டு பல்லவத்தில் சங்கமமானது…
சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த பின்பு காஞ்சியில் கால்வைத்தான் பல்லவ ரிஷபலாஞ்சிதன். கங்கப் பேரரசர் ஸ்ரீபுருஷரை வென்று தனது விருதையும் வெண்கொற்றக் குடையையும் மீட்டு வெற்றிப் பவனிவரும் அவனை வரவேற்க காஞ்சி மாநகரமே திரண்டு நின்றது. வாதாபி வரை சாளுக்கியர்களையும் வடபுலத்து மன்னர்களையும் விரட்டிச் சென்று வாகைசூடி வந்திருக்கும் உதயசந்திரனையும் காஞ்சியின் மக்கள் மலர் தூவி வரவேற்கக் காத்திருந்தனர். அதோ வானளாவிய புழுதிப் படலம் கண்களை மறைக்கின்றன. வருவது நந்திவர்மனா உதயசந்திரனா என்ற ஆவலில் காஞ்சி மக்கள் காத்திருக்க அமைச்சர் அரையனாரும், இளவரசி விமலா தேவியுடன் ஆரத்தி கரைத்து வரவேற்பு நல்க அரண்மனைப் பெண்டிரும் வழிமீது விழிவைத்து காத்திருந்தனர்.
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 1.8 × 14 × 21.5 cm |
| Author | டி.கே.இரவீந்திரன் |
| Publisher | விகடன் பிரசுரம் |
| Pages | 616 |
| Format | paperback |
| ISBN | 9788184767605 |



Reviews
There are no reviews yet.