புத்தர்: எண்ணங்களற்ற இதயத்துக்குச் சொந்தக்காரர்
Original price was: ₹260.00.₹247.00Current price is: ₹247.00.
Description
தமிழில்: சிவதர்ஷினி
புனேயில் இந்த வருடம் பெய்த மழைபோல வேறு எப்போதும் பெய்யவில்லை. காரணம் என்ன? பத்தாயிரம் பேர் அமைதியாக உட்கார்ந்திருந்ததால், மேகங்கள் தானே வானில் கவிந்துவிட்டன நீங்கள் அமைதியாக இருங்கள் எல்லாம் உங்களுக்குத் தானே நடந்தேறும் மிதமிஞ்சி நடந்தேறும் எண்ணமற்ற இதயம் படைத்தவர்களுக்கு இயற்கை தன்னிடம் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தையும் கொடுக்கச் சித்தமாக இருக்கிறது.
கேள்வி கேட்பதற்குப் பதிலாக அமைதியாக எண்ணமற்ற இதயத்துடன் இருந்து பாருங்கள். நீங்கள் எதுவும் செய்யாமலேயே உங்களைச் சுற்றி விந்தைகள் நடந்தேறு வதைக் காண்பீர்கள். எண்ணமற்ற இதயம் படைத்தவருக்கு இயற்கை வழங்கும் நிகரற்ற கொடையாக அது அமைகிறது. அவர் கேட்காமலேயே அதை அடைகிறார் அதைக் கேட்காத போதும், அவர் மனநிறைவு அடைகிறார் அவரது மனநிறைவு முற்றிலும் வித்தியாசமான ஒரு நிகழ்வு.
“பாலி மொழியில் “சுயம்” என்பதை ‘அதா’ என்று அழைக்கிறார்கள். சுயமற்ற நிலையை ‘அநாதா’ என்கிறார்கள். வரலாற்றில் அநாதாவைப் பயன்படுத்திய முதல் மனிதர் புத்தர் ஆவார். சுயமற்ற நிலையே உங்கள் உண்மைத் தன்மையாகும். நான் என்ற எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கள் வெங்காயம் போன்றவர் நீங்கள் அதை உரித்துக் கொண்டு போகும் போது, அடுத்த அடுக்கில் ஏதாவது தென்படும் என்று நினைக்கிறீர்கள் அடுத்த அடுக்கு தென்படுகிறது. உரித்துக் கொண்டே போகிறீர்கள். கடைசியாக உங்கள் கையில் எதுவும் மிஞ்சுவது இல்லை. அந்த ஏதுமற்ற நிலைதான் அநாதா எனப்படுகிறது.
Kannadasan Pathippagam, Osho, Sivadharshini
Additional information
| Weight | 0.28 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 248 |
| Format | paperback |
| ISBN | 9788184028416 |



Reviews
There are no reviews yet.