பெட்ரோ பராமோ
Original price was: ₹299.00.₹285.00Current price is: ₹285.00.
Description
மெக்ஸிக்கோவின் மகத்தான கதைசொல்லிகளில் ஒருவர் யுவான் ரூல்ஃபோ
பேய்கள் நடமாடும் ஒரு ஊரைப் பற்றிய மெக்ஸிக்க நவீன இலக்கியத்தின் செவ்வியல் பிரதி – பெட்ரோ பராமோ.
யுவான் ரூல்ஃபோவின் மகத்தான நாவலுக்குள் நுழையும்போது, மரணத்தால் சூழப்பட்ட ஒரு நகரத்துக்கு அழைத்துச்செல்லும் புழுதிபடர்ந்த சாலைக்குள் நாமும் பயணிக்கிறோம். கனவுகள், விருப்பங்கள், அவற்றோடு நினைவுகளின் வழியாகவும் காலம் எந்தத் தடங்கலுமின்றி ஒரு பிரக்ஞையிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டேயிருக்கிறது. பேய்கள் ஆதிக்கம் செலுத்தும்
கோமாலா எனும் நகரத்தில் நாம் பெட்ரோ பராமோவைச் சந்திக்கிறோம் – ஒரு காதலனாக, கொலைகாரனாக, கருணையற்ற நிலக்கிழாராக.
உணர்வுப்பூர்வமான காட்சிகளும், அன்றாடங்களைப் பற்றிய மீயதார்த்த விவரணைகளும், விவரிக்கவியலாத மர்மங்களும் ஒன்றிணைந்து ரூல்ஃபோவின் இந்த நாவலை ஓர் அதியற்புதப் பிரதியாக மாற்றுகின்றன. கார்லோஸ் ஃபுயந்தஸ், மரியா வர்கஸ் லோஸா, காப்ரியேல் கார்சியா மார்க்குவேஸ் போன்ற லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் ஒரு தலைமுறை எழுத்தாளர்களை பெட்ரோ பராமோ பாதித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. 1955-ல் வெளியானபோது என்ன
உணர்வைத் தந்ததோ, அதேயுணர்வை பெட்ரோ பராமோவை இப்போது வாசிக்கும்போதும் நாம் அடைகிறோம் என்பதே இந்நாவலின் தனிச்சிறப்பு.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author | ஆசிரியர்:யுவான் ரூல்ஃபோ தமிழில்: கார்த்திகை பாண்டியன் |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 184 |
| Format | Paperback |
| ISBN | 9789348598073 |




Reviews
There are no reviews yet.