ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
Original price was: ₹177.00.₹159.00Current price is: ₹159.00.
Description
இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிதாக சொல்லி விடவில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்பில் நான் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், பயணங்கள் இவை எனக்குச் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்.
இந்த “உங்கள்” என்பதில் நானும் அடக்கம். இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும் என்றெல்லாம் சொல்லவரவில்லை. ஆனால் இது உங்க ளுக்கு… உங்களை அடையாளம் காட்டும். உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.
அரக்க பரக்க ஓடிக்கொண்டும், அடுத்த நாள் என்ன செய்வது என்று தேடிக்கொண்டும், தோளில் இருந்து கழற்ற முடியாத சுமையாக சவால்களை சுமந்து கொண்டும் களைத்துப் போய் ஓடிக்கொண்டும் இருக்கிறோம். நமக்கு நாம் சரியாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோமா…
ஓடுகிற திசையில்தான் என் இலக்கு இருக்கிறதா என்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்து யோசிக்க வைக்க இந்த புத்தகம் பயன்படலாம்.
என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? ஏன் இது நடக்கவில்லை? இது நடக்க என்ன செய்வது என்பது போன்ற கேள்விகளை வெறும் உறுத்தலாக பார்த்துக்கொண்டு இருக்கும் நம்மில் பலருக்கும் இந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடும் ஒரு பார்வையாக இந்த புத்தகம் இருக்கும்.
நாம் சவால்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தவற்றை… இந்தப் புத்தகம் சாதாரணம் என்று சொல்லலாம். சாதாரணம் என்று நினைத்துக் கொண்டு இருந்தவற்றை சவால்கள் என்றும் விளக்கலாம்.
ஆனால் அதை உங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்த்து இந்த குறிப்பிட்ட விஷயத்தில் எனது வேலை என்னவாக இருக்க வேண்டும் என்று இந்த புத்தகம் உங்களுக்கு உணர்த்தக் கூடும்.
மறுபடியும்…நான் எதையும் புதிதாக சொல்லி விடவில்லை. ஒன்றும், ஒன்றும் இரண்டு என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் கணக்குகளின் எண்ணிக்கை அதிக மாகிறபோது ஒரு கால்குலேட்டரை தேடுகிறோம். அதனால் உங்களுக்கு கணக்கு தெரியாது என்பதல்ல.
இந்த புத்தகம் ஒரு கால்குலேட்டர். உங்க ளுக்கு தெரிந்ததை… நீங்களே வேகமாக புரிந்து கொள்ள இது எழுத்து கால் குலேட்டர்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author | கோபிநாத் |
| Publisher | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN | 9788192465722 |



Reviews
There are no reviews yet.