மன்னன் மகள்
Original price was: ₹520.00.₹494.00Current price is: ₹494.00.
Description
சிருஷ்டிக் கடலிலே மனித வாழ்க்கை ஒரு மரக்கலம். அந்தக் கடலில் பயணத்தை இன்பமயமாக்கவல்ல தேமதுரத் தென்றலுண்டு, இஷ்டப்பட்ட திசையை நோக்கிப் பாய்மரங்களை உந்திச் செல்லும் பருவக் காற்றுகள் உண்டு. கரை சேராமலே கவிழ்த்துவிடும் சுழல்களுண்டு. சுழன்று சுழன்றடித்துப் பயணத்தின் திசையை மாற்றி எதிர்பாராத கரையில் கொண்டு தள்ளிவிடும் சூறாவளிகள் உண்டு. எது எப்பொழுது நேரும். வாழ்க்கைப் பயணம் எப்படித் திசை மாறும் என்று மட்டும் சொல்ல யாராலும் இயலாது. மனித புத்திக்கு அப்பாற்பட்ட சிருஷ்டி விசித்திரம் அது. அந்த விசித்திரங்களில் ஒன்றினால்தான் கரிகாலன் அந்தச் சைவத் துறவியை அன்று காவிரியின் கரையிலே சந்திக்கவும் அவருடன் சம்பாஷணையில் இறங்கவும் நேர்ந்தது.
நினைவு தெரிந்த நாளாகச் சூடாமணி விஹாரத்தையும் நாகைப்பட்டணத்துக் கடைத்தெருவையும் தவிர வேறெதையும் காணாத கரிகாலன் கண்களுக்குக் காவிரிக் கரையின் மாலை நேரம் விவரிக்க இயலாத பிரமிப்பை அளித்ததால், அவன் மனத்தைப் பரிபூரணமாகப் பொன்னியின் எழிலிலேயே லயிக்கவிட்டுக் குதிரையின் மீதே நீண்டநேரம் அசைவற்று உட்கார்ந்திருந்தான். குட மலையில் பிறந்த காவிரியன்னை , தன் சிறு பருவத்தில் அம்மலைப் பாறையில் தவழ்ந்து இறங்கி, சற்றுக் கீழேயிருந்த சிறு கற்களிலும் பாறைகளிலும் தளர்நடை புரிந்து, பிறகு துள்ளியோடி, வழியில் சரணடைந்த பூமியையெல்லாம் வளம் தந்து வாழ்வித்துச் சோணாடு வரும்போது கன்னிப் பருவமெய்தியதால் எல்லையற்ற எழிலுடனும் நாணத்துடனும் சிறிது அடக்கமாகவே அழகு நடை நடந்து வந்தாள். குடமூக்கு எனப் பழங்கவிகளால் புகழ்பெற்ற கும்பகோணத்தின் கரையிலே நின்று அவள் வனப்பைக் கண்ட கரிகாலன் இத்தகைய ஒரு சிருஷ்டி அற்புதத்தைக் காணாமல் எதற்காக இருபத்து ஓராண்டுகள் கழித்தோம் என எண்ணி ஏங்கி ஒரு பெருமூச்சு விட்டான்.
மாலைநேரத்து மஞ்சள் வெயில் மேலே பட்டதால் பசு மஞ்சளை அரைத்துப் பூசிய பருவமங்கையெனப் பளபளத்துக் கொண்டிருந்தாள் பொன்னி. அவளை இருபுறமும் தாக்கிய கரைகளிலிருந்து அவள் ஒடுங்கிச் சென்றது திருவிழாக் கூட்டத்தின் நடுவே சிக்கிய கன்னியர் நடக்கும் அழகு நடையை நினைப்பூட்டியது. அவள் சரீர அலைகளிலே கதிரவன் கிரணங்கள் பாய்ந்ததால் பளிச் பளிச்சென்று மின்னிய ஒளிகள் அவள் எத்தனை வைர வைடூரியங்களை அணிந்திருந்தாள் என்பதை நிரூபித்தன. தங்களை அணைத்தோடும் அந்தப் பெண்ணுக்கு மலர் சூட்ட எண்ணமிட்ட கரையோர மரங்கள், தென்றலில் லேசாக அசைந்தாடிப் புஷ்பங்களை அவள் மேனியிலே உதிர்த்தன. பொன்னியின் அலைக்கரங்களும் அந்தப் புஷ்பங்களைத் தாவிப்பிடித்து இடை இடையேயிருந்த குழல்களில் சேர்த்துக் குவித்து தமிழ்நாட்டின் அந்த இளவரசியின் கூந்தலுக்குச் சின்னஞ்சிறு புஷ்பக் கிரீடங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தன. அந்த அலங்காரத்தால் மகிழ்ந்த பொன்னியும் சில சிறு வெள்ளைத் திறைகளை லேசாக எழுப்பி மந்தகாசம் செய்தாள். அந்த மந்தகாசத்திலும் பொன்னியின் நாணம் மிகுந்த அன்ன நடையிலும் எத்தனை எத்தனை கவிப் பெருமக்கள் தங்கள் மனத்தைப் பறிகொடுத்திருக்கிறார்கள்!
பிற்காலத்தில் பொன்னி பெருக்கெடுத்த ஒரு சமயத்தில் ‘பெண்கள் நாணத்தை விடலாகாது, நாணமென்னும் கரை உடைந்தால் நாட்டுக்கு நாசம்’ என்ற பொருளை வைத்து
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 3.5 × 12.8 × 18.6 cm |
| Author | சாண்டில்யன் |
| Publisher | வானதி பதிப்பகம் |
| Pages | 716 |
| Format | Hard Cover |
| ISBN |




Reviews
There are no reviews yet.