மீண்டும் ஜீனோ
Original price was: ₹340.00.₹323.00Current price is: ₹323.00.
Description
வளர்த்து வரும் விஞ்ஞான உலகத்தில் என்னென்ன நடக்குமென்ற தன் சிந்தனை யோட்டத்திற்கு உரு கொடுக்கிறார் சுஜாதா. இந்தக் கதையில் ஜீனோ என்ற இயந்திர நாய் மனித சமுதாயம் சுபிட்சமடைய ராணி நிலாவுக்கு உதவுகிறது.
உலக நாடுகளின் தலைமையை உற்று நோக்கும்போது விபரீதமான போர் நோக்கும் சர்வாதிகார எண்ணமுமே தலைவிரித்தாடு கிறது. வலுவிழந்த நாடுகள் செய்வதறியாது அயல்நாட்டு ஆயுதங்களை வாங்கி தன்னைத் தற்காத்துக் கொள்ள முனைகின்றன. நாட்டு மக்கள் பட்டினி கிடந்தாலும் பாதகமில்லை. போர் வலுப்பெற வேண்டுமென்று அல்லும் பகலும் அயல்நாட்டை நம்பியே வாழ்கின்றன.
இந்த விபரீதப் போக்கு நீடித்தால் மனித சமுதாயம் என்ன ஆகும்? உப்பு சப்பற்ற இயந்திர வாழ்க்கை தான் மிஞ்சும்.
இந்தச் சூழலில் சுஜாதா மனிதர்கள் செய்யும் மோசடிகளைப் பார்த்து இயந்திரத் துக்கு யோசிக்கும் திறனைத் தருகிறார்.
ஜீனோ என்ற குட்டி நாய் இறுதியில் வந்த மக்கள் ஆட்சி எல்லாமே மக்களை ஏமாற்றி சதி செய்யும் கூட்டம் என்பதை உணர்ந்து நிலாவுக்கு உதவி செய்கிறது. அதற்காக அது செய்யும் சாகசங்கள் மிக அற்புதம். அந்த iv
இயந்திர நாய்க்குக்கூட பெண்ணின் கவர்ச்சியில் கொள்ளை இன்பம். வாரம் ஒரு தடவை முத்தம் கேட்கிறது.
மனிதர்களை விட இயந்திரங்கள் உண்மையாய்ப் பாசாங்கு செய்யாமல் இந்த தேசத்தைக் காக்க முடியும். ஆள்வோர் தன் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் சுயநல வேட்கை கொண்டு நாட்டை வேட்டைக் காடாக்கி வரும் இந்த நாளில்..? அதற்கு மாற்று என்ன? இப்படி யோசித்ததின் பலனே இந்தப் புதிய சிந்தனை.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.5 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 328 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.