மோகனச்சிலை

Original price was: ₹290.00.Current price is: ₹275.00.

Only 10 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

காட்டு மரங்களை ஊடுருவிய காலைக் கதிரவன் கிரணங்களால் கண்களைக் கவரும் கட்டழகுடன் காட்சியளித்த காரிகை அத்தனை தூரம் ஊக்கியும், அவளைக் காவலரிடமிருந்து கவர்ந்து வந்த கள்வன் முதலில் பேச மறுத்தாலும், பேசத் துவங்கிய போது அதிர்ச்சி தரும் சொற்களை உதிர்ந்தான். சிறிது சிந்தனைக்குப் பிறகு. “நான் வந்த விஷயத்தைச் சொல்லுமுன்பு நீங்கள்தான் இந்த நாட்டு அரசகுமாரி என்பது எனக்குத் திட்டமாகத் தெரிய வேண்டும்” என்று கூறிய வாலிபன் அவளைத் தன் கூரிய விழிகளால் ஏறெடுத்து நோக்கினான். அவன் சொற்களைக் கேட்டதால் திகைப்பும் அதிர்ச்சியும் சீற்றமும் கலந்த உணர்ச்சிகளால் ஊடுருவப்பட்ட அரசகுமாரியும் தனது வேல் விழிகளை அவன் விழிகளுடன் கலந்தாள். வேல்களுடன் வேல்கள் உராய்ந்தது போன்ற இருவர் பார்வையும் ஒன்றையொன்று சில விநாடிகள் கவ்வி நின்றதால் இருவரிடையும் ஏற்பட்ட மௌனம் திடீரெனக் கலைக்கப்பட்டது. இளவரசியின் இதயத்தில் எல்லா உணர்ச்சிகளுக்கும் மேலாக எழுந்துவிட்ட சினத்தின் விளைவாக “நீ வீரனா? பித்தனா?” என்று சீறி வந்த சொற்கள் இதயகுமாரனை எரித்து விடுவன போலிருந்தாலும், அவன் அவள் சீற்றத்தையோ சொற்களையோ சிறிதும் பொருட்படுத்தாமல் சொன்னான், “இந்த நகரத்துக்குள் புகுந்த போது வீரன், தங்களைப் பார்த்ததும் பித்தன்” என்று. இதயகுமாரனின் இந்தத் துணிகர பதில் இளவரசியின் சீற்றத்தைச் சிறிது தணித்ததா, அல்லது விசிறிவிட்ட கோபத்தை அவள் வேண்டுமென்றே மறைத்துக்கொண்டாளா. சொல்ல முடியாது. அவள் விழிகளில் விஷமச் சிரிப்பின் சாயையொன்று படர்ந்து, அது முகத்திலும் விரிந்து மலர்ந்தது. செவ்விய இதழ்களிலும் சிறிது இளநகையைக் கூட்டிக் கொண்ட அரசகுமாரி எதிரே நின்ற அந்த வாலிபனை ஆராயத் தொடங்கினாள். விடு விடு என்று நிகழ்ந்து விட்ட சம்பவங்களால் அவனை எடை போட முடியாத அரசகுமாரி மரக்கூட்டங்கள் அளித்த இடைவெளியில் காவலர் அரவமோ இடைஞ்சலோ இல்லாத அந்த நேரத்தில் நன்றாகவே நோக்கினாள் எதிரே நின்ற அந்த வீரனை.

Additional information

Weight 0.3 g
Dimensions 1.6 × 12 × 18 cm
Author

சாண்டில்யன்

Publisher

வானதி பதிப்பகம்

Pages

416

Format

paperback

ISBN
Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories