லாபம் தரும் ஜீரோ பட்ஜெட்
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
“ரசாயனத்துல விவசாயம் செஞ்சப்ப ஏக்கருக்கு 2,000 கிலோ நெல் மகசூல் கிடைச்சது. இயற்கைக்கு மாறின பிறகு, முதல் வருஷமே 2,100 கிலோ மகசூல் கிடைச்சுது. பிறகு, இடுபொருட்கள் கொடுக்குறத குறைச்சாலும்கூட மகசூலோட அளவு 2,200, 2,300 கிலோனு அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்கு.”
“அரை ஏக்கர்ல 2,500 கிலோ சின்ன வெங்காயம் மகசூல் கிடைச்சுது. இதுவே ரசாயன முறையில சாகுபடி செஞ்சுருந்தா… அரை ஏக்கர்ல 3,500 கிலோ வரைக்கும் மகசூல் எடுத்திருக்கலாம். ஆனா, இடுபொருள் செலவு, பூச்சிக்கட்டுப்பாடு செலவு எல்லாம் சேர்ந்து, அந்த கூடுதல் மகசூலை சாப்பிட்டுடும். நாங்க ஜீரோ பட்ஜெட் முறையில செஞ்சதால, அதுக்காக நாங்க நிறைய செலவு செய்யல. மனசுக்கும் நிம்மதியா இருக்கு.”
“நடவிலிருந்து 15-வது நாளில் 15 லிட்டர் ஜீவாமிர்தத்தை 150 லிட்டர் தண்ணீரில் தெளித்தும், 30-வது நாளில் 15 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்தும் கொடுத்தேன். 20-வது நாள் பார் அணைத்துவிட்டேன். 50-வது நாளில் இருந்து 120 நாட்கள் வரை தினமும் சராசரியாக 20 கிலோ காய்கள் பறித்தேன். மொத்தம் 70 பறிப்பில் 1,400 கிலோ வெண்டை மகசூல் கிடைத்தது.”
“கரும்பில் வளர்ச்சி குறைவாக இருந்தால், இரண்டு கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து, பாசன நீருடன் கலந்துவிடலாம். இதனால், தோகையின் பச்சையம் மாறாமல் இருக்கும். இதையெல்லாம் செய்தாலே உப்புநீரா இருந்தாலும், வளர்ச்சி குன்றாம செழிப்பா… கரும்பு பயிர் பண்ணலாம். ஏக்கருக்கு 48 டன் அறுவடை செஞ்சேன்.”
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author | விகடன் குழு |
| Publisher | விகடன் பிரசுரம் |
| Pages | 168 |
| Format | paperback |
| ISBN | 9788184767322 |



Reviews
There are no reviews yet.