விகடகவி தெனாலிராமன் கதைகள்
Original price was: ₹350.00.₹332.00Current price is: ₹332.00.
Description
பஞ்ச தந்திரக் கதைகளைப் பூரணமாக, முழுமையாக வெளியிட்டது. போல், விகடகவி தெனாலி ராமன் கதைகளையும் முழுமையாக வெளியிடுகிறோம்
இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலி ராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன.
இதன் ஆசிரியர், தெனாலி (அவன் பிறந்த ஊர்), விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதலிய இடங்களுக்கு நேரிலேயே சென்றவர். சுற்றுப்புற கிராமங்களில் இன்றும் உலவி வரும் சில தெனாலி ராமன் கதைகளையும் சேகரித்துக் கொண்டுவந்து, இதில் சேர்த்துள்ளார்.
ஆசிரியருக்குத் தெலுங்கு மொழியும் தெரியுமாதலால், அங்குள்ள மக்களுடன் உரையாடி, இதுவரை வெளிவராத புதிய தெனாலி ராமன் கதைகளைச் சேகரிக்க முடிந்தது.
அதனால் தெனாலி ராமன் கதைகள் இத்தனை முழுமையாக வெளிவருவதில் இதுவே முதல் நூலாகும்.
அத்தனையும் உண்மைக் கதைகள். ஒவ்வொன்றும் நன்கு சிரிக்க வைக்கும் கதைகள், நீங்கள் இவற்றைப் படித்து நன்கு கலகலவெனச் சிரித்து மகிழலாம். இலேசாகச் சிரித்து விடாதீர்கள்; வாய்விட்டுச் சிரியுங்கள். அதுவே ஆரோக்கியத்திற்கு அறிகுறியாகும்.
பெரியோர்களுடன், சிறுவர்களும் படித்துச் சிரிக்கலாம். சுகமாக, இன்பமாக அறிவையும் விருத்தியாக்கலாம்.
அளித்துவரும் எங்களது பஞ்ச தந்திரக் கதைகளுக்கு ஆதரவைப்போல், இந்த தெனாலி ராமன் கதைகளுக்கும் முழுமையான ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்கள் மேலான ஆதரவு, இன்னும் பல நல்ல நூல்களை வெளியிடுவதற்கு எங்களுக்குத் தூண்டுகோலாக அமையும் என்று நம்புகிறோம்.
Additional information
| Weight | 0.75 g |
|---|---|
| Dimensions | 2.5 × 19 × 25.4 cm |
| Author | பி.எஸ்.ஆச்சார்யா |
| Publisher | நர்மதா பதிப்பகம் |
| Pages | 312 |
| Format | Hard cover |
| ISBN | 978938643381 |



Reviews
There are no reviews yet.