விலங்குப் பண்ணை
Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
Description
தமிழில்: க.நா. சுப்ரமண்யம்
தனிநபர் வசம் சிக்கிக்கிடக்கும் சர்வாதிகாரத்தை நையாண்டிச் செய்கிறது, ‘விலங்குப் பண்ணை.’ இது 1945இல் வெளி வந்த Animal Farm என்ற நாவலின் தமிழ் மொழிபெயப்பு. லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில். ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல.
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.
இந்த நாவல் முழுக்க முழுக்க ரஷ்யப் புரட்சியையும் அதன் பின் நேர்ந்த விளைவுகளையும் குறிப்பாக ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவின் அரசியலையும் உருவகப்படுத்தி விமர்சிக்கிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |




Reviews
There are no reviews yet.