வேட்டை நாய்கள்! பாகம்-2
Original price was: ₹270.00.₹256.00Current price is: ₹256.00.
Description
பிரிட்டிஷ் காலத்துக்கு முன்பிருந்தே, தூத்துக்குடி ஹார்ப்பர் பகுதிகளில் மிகப் பெரியளவில் கடல் வணிகம் செய்துவரும் பர்லாந்து குடும்பத்தின் வாரிசுகளான பெரியவர் ஜோசப் பர்லாந்து, சின்னவர் டேவிட் பர்லாந்து ஆகிய இருவரின் அதிகார யுத்தம்தான் ‘வேட்டை நாய்கள்’ தொடரின் கதைக்களம். பெரிய பர்லாந்தின் தளபதி சமுத்திரத்துக்கும் சின்ன பர்லாந்தின் தளபதி கொடிமரத்துக்கும் இடையிலான மோதலில் தூத்துக்குடி நகரமே கொலைக்களமாகிறது.
இதற்கிடையே பம்பாய் ஹார்பரில் ஏற்பட்ட நெருக்கடிகளால், தூத்துக்குடி ஹார்பர் வழியாகத் தங்களின் கடத்தல் தொழிலை நிலைநிறுத்த நினைக்கிறார்கள் திரவியம் அண்ணாச்சியும் மஸ்தானும், அதற்காக, இரண்டு பர்லாந்துகளையும் அவர்களுக்குப் போட்டியாக ஹார்பர் தொழிலில் ஈடுபட்டுவந்த காசி அண்ணாச்சியையும் சமரசம் செய்து தங்களின் கூட்டணியில் இணைக்கிறார்கள்… போன்ற சம்பவங்கள் வேட்டை நாய்கள் நூலை விறுவிறுப்பாக்குகின்றன. தமிழின் மிகச்சிறந்த ‘வெப் சீரீஸ்’ ஒன்றை உருவாக்குவதற்கான அத்தனை கதையம்சமும் கலையம்சமும் ‘வேட்டை நாய்கள்’ புத்தகத்தில் உண்டு!”
– எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1 × 16.5 × 23.4 cm |
| Author | நரன் |
| Publisher | விகடன் பிரசுரம் |
| Pages | 232 |
| Format | paperback |
| ISBN | 9789394265721 |



Reviews
There are no reviews yet.