வீரப்பன்: வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (4 பாகம்)
Original price was: ₹2,000.00.₹1,800.00Current price is: ₹1,800.00.
Description
மதிப்புரை…
தமிழகம், கர்நாடகம், கேரளா என மூன்று மாநில காடுகளில் மறைந்து வாழ்ந்த வீரப்பனை முழுமையாகப் படம் பிடித்துக் காட்டும் நூல். யானை வேட்டைக்காரனாக இருந்த வீரப்பன் சந்தனக் கடத்தல்காரனாக மாறியது எதனால், உள்ளூர் எதிரிகள்,வனத்துறை, போலீஸ் என பலரைக் கொன்றது எப்படி என முழுமையாக இந்நூல் சொல்கிறது.
நன்றி-தினத்தந்தி 22:11:2020
தமிழக -கர்நாடக வனங்களில் உள்ள மரங்கள், வன விலங்குகள்,பழங்குடிகள், அங்கு வசிக்கும் பொது மக்களின் சமூக பொருளாதாரச் சூழல்கள்,அணை, ஆறுகள்,குறித்த பல்வேறு தகவல்களையும் நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.வீரப்பனை பல்வேறு பரிமாணங்களில் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.
நன்றி- தினமணி 25:01:2021
மொழுக்கன் என ஊராரால் அறியப்பட்ட வீரப்பன் பின்னாளில் உலகத்தையே மிரளவைக்கும் குற்றவாளியாக மாறியது எப்படி, அவனுக்குப் பக்கபலமாக இருந்தது யார்? என எல்லாக் கேள்விகளுக்கும் இந்நூல் பதில் அளிக்கிறது உண்மையில் வீரப்பன் பிடிபட்டது எப்படி என்பதை படிப்படியாக சித்திரம்போல கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது இந்நூல்.
நன்றி-ஆனந்த விகடன் 20:01:2021
வீரப்பன் வரலாற்றை நூலாகக் கொண்டுவர நூலாசிரியர் ஆயிரம் பேரை சந்தித்து உரையாடியுள்ளார்.அந்தக் காடுகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்துள்ளார். நம்மையும்கூட அவரோடு பயணம் செய்யவைக்கிறார். நூலைக் கையில் எடுத்த எவரும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. வீரப்பன் வாழ்ந்த அந்தக் காட்டைவிட்டு மனம் வெளியேவர மறுக்கிறது.
நன்றி-மின்னம்பலம்.காம் 19:11:2020
Additional information
| Weight | 1.9 g |
|---|---|
| Dimensions | 9.2 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 1744 |
| Format | paperback |
| ISBN | 9788195461158 |











Reviews
There are no reviews yet.