அக்காக்கள் வாழ்ந்த வீடு
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
“அக்காக்கள் வாழ்ந்த வீடு அனேகமாக படைப்புலகில் அக்காக்களைப் பற்றிய முதல் தொகுப்பு. அதாவது தமிழிலே வந்த முதல் தொகுப்பு இதுவாகத்தான் இருக்கும். இது கோடிட்ட இடத்தை நிரப்புகிற கவிதைகள் அல்ல; படித்துவிட்டு கவிதைக்கு கீழே அடிக்கோடு போடுகிற கவிதைகள்!
– பாடலாசிரியர், கவிஞர் தமிழ்அமுதன், நிறுவனர், த.தி.பாடலாசிரியர்கள் சங்கம்
இந்தத் தொகுப்பு முழுமையும் கையற்றுப் புலம்பும் ஒரு தம்பியின் கதறல் விழிப்புலன் வழி உட்புகுந்து செவிப்புலனைத் தகர்க்கிறது. இதயத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழிக்கிறது. வாசிக்கும்போதே நெஞ்சம் துக்கத்தால் விம்முகிறது.
– பேராசிரியர் ஆதிரா முல்லை
இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை படிக்கின்றபொழுது இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுடைய ‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதாவாகதான் பல இடங்களில் காட்சித் தருகிறார்கள் அக்காக்கள். அம்மாவைப் பற்றி எழுதவே யோசிக்கும் காலக்கட்டத்தில் அக்காவைப் பற்றி எழுதுவதெல்லாம் அன்பின் பெருமிதம்.
– திரைக்கலைஞர் ரேகா சிவன்
இந்தப் புத்தகத்தை படிக்கிற ஒவ்வொரு அக்காவும் செந்தமிழுக்கு சொந்தம் ஆகிடுவாங்க, அது மட்டும் உறுதி.
– திரைக்கதையாசிரியர் பத்மாவதி
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN | 9789349113008 |



Reviews
There are no reviews yet.