அந்த அக்காவைத் தேடி
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
அண்மையில் நான் எழுதிய, ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஆனால் தனித்தனியே படிக்கத் தகுந்த இரண்டு கதை களின் தொகுதி இது. இத்துடன் தொடர்பு உடைய முதல் கதை ‘நம்ப மாட்டேளே?’ இதற்கு முந்தைய தொகுதி யான ‘கழுத்தில் விழுந்த மாலை’யில் சேர்ந்து விட்டது. நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் முக்கியம். வாராவாரம் எழுதுகிறேனா, ஒரே புத்தகமாக எழுதுகிறேனா, நிறைய எழுதுகிறேனா, நீளமாய் எழுதுகிறேனா என்பதெல்லாம் புற நிகழ்வுகளினால் ஏற்படுகிற மாற்றங்களே ஆகும்.
பெண்கள் தாமே தமது உருவ அழகில் மயங்கி, தன்னை ஒரு மோகினியாக நினைத்துக்கொண்டு, அசட்டுத்தனமான கற்பனைகளில் சிக்கி, ஆண்களைத் தம்மை ஆளத் தகுந்த எஜமானர்களாக ஆக்கி அடிமைப்படுவதைத்தான் நடைமுறை வாழ்வில் நிறையவே பார்க்கிறோம். கல்வியும் அறிவும் பண்பும் திறமையும் கொண்ட நவீன கால யுவதிகளுக்கு அடிமைப்படுவது என்பது முந்தைய தலைமுறைப் பெண்களுக்குக் வந்திருந்ததைப்போல் இன்று கைகூடுவது கை சிரமம். இந்தப் பிரச்னையில் சிக்கிக் கொண்டு சமாளிப்பதைவிட, சிக்காமல் விடுதலை பெறுவதுதான் காலப்போக்கில் நற்பயன்களை உண்டாக்கும் என்று நம்புகிற பெண்கள் தோன்றியுள்ளனர்.
தனியுடைமை ஒழிந்த சமூகத்தில் அல்லாமல் வேறெங்கும் பெண் விடுதலை சாத்தியமில்லை. எனவே பெண்கள் பிறவியிலேயே சோஷலிஸப் பண்பு கொண்டவர்களாக வருங்காலத்தில் மாறுவர்.
இலக்கியமும் கொள்கைப் பிடிப்பும் உள்ள இளைஞர்கள் ஒன்றுபடுவதன் மூலமும், புதிய வாழ்க்கை முறைகளையும், புதிய மதிப்பீடுகளையும் தத்தம் சொந்த வாழ்க்கையிலும் கூட்டாகவும் நிறுவி நிரூபிப்பதன் மூலமும் இந்தச் சமூக மாற்றத்துக்கு, அவர்கள் போராட்டத்தின் பயன்களாகவும் விளைவுகளாகவும் புதிய கலைகளும் இலக்கியங்களும் பரிணமிக்கும் என்பது எனது நம்பிக்கை.
அந்த நம்பிக்கையினால் உருவான பாத்திரங்களே இக்கதையில்வரும் பெண்கள். இவர்களைப் போன்ற பெண்கள் உண்டா? என்று என்னிடம் கேட்பவர்களுக்கு:
உண்டு; உண்டு… தேடுங்கள் கண்டு அடைவீர்கள் என்பதே எனது பதில்.
இவற்றைத் தனித்தனியே வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், புத்தகமாகத் தருகிற பதிப்பகத்துக்கும் வாசகர் சார்பில் நன்றி.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.