அன்பளிப்பு
Original price was: ₹11.00.₹10.00Current price is: ₹10.00.
Description
குழந்தைகளே இப்புவியைச் சுழல வைக்கும் மைய அச்சு. அவர்களை நேசிக்காதவர்கள் யாருமில்லை. ஆனால், குழந்தைகளை நேசிப்பது என்பது வேறு, அவர்களைப் புரிந்துகொள்வது வேறு. இளந்தளிரிலும் மென்மையானவை குழந்தைகளின் மனம். அம்மனத்தை வெல்ல முயலாது, தோழமை பாராட்டுவதை குழந்தைகள் விரும்புகிறார்கள். அந்தத் தோழமையில் துளியும் பேதம் இருக்காது; ஆதிக்கம் இருக்காது; பொய்மை இருக்காது; கலங்கல் இருக்காது. இவையெல்லாம் உங்களின் தோழமையிலும் குழந்தைகளின் மனம் எதிர்நோக்கும். ஒருவேளை உங்கள் தோழமையில் அது பொய்க்கையில், அதை இளந்தளிரால் தடவிக்கொடுத்து உணர்த்தும். இளந்தளிர்தான் எனினும் உங்களால் அதைத் தாங்கவே முடியாது என்பதை கனிந்த சொற்களின் வழியே ‘அன்பளிப்பு’ அளித்திருக்கிறார் கு.அழகிரிசாமி.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அதிஅற்புதமான கதைகளில் முதன்மையானது அன்பளிப்பு. பெரியவர்கள் குழந்தைகளுடன் உரையாட குனிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். உண்மையில், குழந்தைகள் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்கள். பெரியவர்கள் அதற்குத்தக்க தம் பார்வையை மாற்ற வேண்டும் என்பதை முகத்தில் அடித்துச் சொல்லும் கதை அன்பளிப்பு. எத்தனை முறை படித்தாலும்,எத்தனை முறை கதையாகச் சொன்னாலும் கடைசியில் விசும்பலைத் தவிர்க்கவே முடியாது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 32 |
| Format | paperback |
| ISBN | 9788197673313 |



Reviews
There are no reviews yet.