அழியாத கோலங்கள்
Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
Description
சக திரைகலைஞர்களின், நண்பர்களின் நினைவில்…
வாழ்வின் ஒரு நொடி கூட மாற்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் கலப்பில்லாத கலைஞனாகவே வாழ்ந்து நிறைவடைந்தவர் அவர். சத்தமில்லாமல், அதிராமல், நிதானமாய் வாழ்ந்த வாழ்வு அது. நான் இப்படித்தான் இருப்பேன், அது மாறாது. புலியின் மேல் வரிகள் என்னுடையது, அது மரணித்தாலும் போகாது என்று பேசும் அவர் கடைசி மூச்சு வரை அப்படியே வாழ இந்த பிரபஞ்ச சக்தி அவரை அனுமதித்தது.
பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கிய படம் ‘அழியாத கோலங்கள்’. இயக்குனராக தமிழில் இதுவே பாலு மகேந்திராவின் முதல் படம். பருவ வயதில் காதலுக்கும் காமத்திற்கும் இடையில் தவிக்கும் வளரிளம் பருவச் சிறுவர்கள் பற்றிய படம். அப்போது வரை தமிழ் சினிமா சென்ற பாதையினை அப்படத்தின் மூலம் திசை மாற்றினார் பாலு மகேந்திரா.சிறுவனாக இருந்தபோது முதன்முதலில் கேமராவை தொட்டுப் பார்த்த அனுபவத்தைப் பற்றி கூறும்போது ‘என் வீட்டு வாழைமரத்தின் பின் அன்னலட்சுமியை தொட்டபோது உண்டான சிலிர்ப்பை கேமராவைத் தொட்டபோது உணர்ந்தேன்’ என்றார் அவர். ‘அழியாத கோலங்கள்’ அப்படியான கதைக்களத்தை கொண்டதுதான். இப்போது கூட அப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் வளரிளம் பருவகாலம் மனக் குகையில் நிழலாடுவதை தவிர்க்க முடியாது.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 399 |
| Format | paperback |
| ISBN | 9789384598914 |



Reviews
There are no reviews yet.