இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்

Original price was: ₹320.00.Current price is: ₹304.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஆபிரகாம் லிங்கன் கூறுவார் : ‘ஒரு நீண்ட உரையை நான் வெகு எளிதாய் நிகழ்த்திவிடுவேன். ஆனால், சுருக்கமாக ஒன்றைச் சொல்வதென்றால், எனக்குக் கால அவகாசம் அதிகம் தேவைப்படும்’ என்று. ரொம்ப சரி. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க நம் நாட்டின் மிகச் சிறந்த அறிஞர்களும், நிபுணர்களும் வெகுவாய் சிரமப்பட்டிருக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சாசனவரைவில் ஈடுபட்ட உருவாக்கக்குழு 1948-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 315 பிரிவுகள் 8 அட்டவணைகளுடன் சாசனத்தைத் தயாரித்தது. அதனைப் பரிசீலித்த பாராளுமன்றம் 2473 திருத்தங்களைத் தாக்கல் செய்து நிறைவாக சாசனத்துக்கு இறுதிவடிவம் கொடுத்தபோது 395 பிரிவுகள் 8 அட்ட வணைகள் கொண்டதாகிவிட்டது. அதன் பிறகு சட்டத்தில் அவ்வப்போது செய்யப்பட்ட திருத்தங்கள் பல.

மிகப் பெரிய தேசத்தின் பாதுகாப்பையும், பல கோடி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்ட சாசனம் இது. தெளிவு, புரிதல், கச்சிதத்தன்மை கொண்டதாய் தொலைநோக்குடன் உருவாக்கப்பட்டி ருக்கிறது.

உலகில் வேறெந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்துக் கும் இல்லாத சிறப்பொன்று நமது சாசனத்துக்குஉண்டு. இதனை உருவாக்குவதற்கு முன் நமது அறிஞர்கள் குழு ஒன்று அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து என்று பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள அரசியல் அமைப்புகளை ஆராய்ந்து வந்தது. அவற்றுள் அவசிய மானதைத் தேர்ந்து செய்யப்பட்டதுதான் இந்திய அரசியல் சாசனம்.

மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதிமுறை மேலாய்வை அமெரிக்க அரசியல் சட்டத்தில் இருந்தும், பாராளுமன்ற முறையை இங்கிலாந்தில் இருந்தும், அரசின் நெறிப்படுத்தும் பொது ஆணைகளை அயர்லாந்தி டம் இருந்தும், சட்டமியற்றும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதை கனடாவிடமிருந்தும் நாம் சுவீகரித்துக் கொண்டோம்.

இங்கிலாந்தில் பாராளுமன்ற அமைப்பு தோன்றியது 1264-ஆம் ஆண்டில். ஆனால், அங்கே வயது வந்தோ ருக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது, 1928-ஆம் ஆண்டில். எழுநூறு ஆண்டுகள் தேவைப்பட்டது இங்கிலாந் திற்கு. நம்மவர்களோ எழுதுகோலின் சிறு அசைவின் மூலம், அந்த உரிமையைச் சாசனத்தில் இடம்பெறச் செய்து விட்டார்கள்.

இந்திய அரசியல் சாசனம் இந்நாட்டு மக்களின் ‘வாழ்வாதாரம்’. இன்று உலகக் குடியரசு நாடுகளில் நாம் வெற்றிகரமாய்த் திகழ்வதற்கு இதுவே காரணம்.

நீங்கள் சட்டக் கல்லூரி மாணவராகவோ, அரசியல் வாதியாகவோ, அரசில் பணியாற்றுகிறவராகவோ ஏன் ஒரு சாதாரண இந்தியப் பிரஜையாகவோ கூட இருக்கலாம். எப்படியாயினும் தனது உரிமைகள் கடமைகள் பற்றி, தான் எப்படி ஆளப்படுகிறோம் அல்லது ஆளவேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அந்தக் கடமையை நீங்கள் சரிவரச் செய்ய இந்நூல் உங்களுக்குக் கட்டாயம் உதவும்.

– பதிப்பாசிரியர்

Additional information

Weight 0.6 g
Dimensions 2.8 × 15 × 23 cm
Author Name

Publisher

Pages

364

Format

Hard cover

ISBN

9789386433305

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories