இளவரசன்
Original price was: ₹170.00.₹153.00Current price is: ₹153.00.
Description
தமிழில்: பெரு.முருகன்
“மக்களின் இயல்பை அறிய ஒருவன் அரசனாக இருக்க வேண்டும்; அதைப்போலவே அரசரின் இயல்பை அறிய ஒருவன் பொதுமக்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.”
ஐந்நூறு ஆண்டுகளைக் கடந்தும் உலக அரசியல் தத்துவ வரலாற்றில் ‘தி பிரின்ஸ்’ அளவுக்கு விவாதிக்கப்பட்ட, விமரிசிக்கப்பட்ட நூல் வேறொன்றுமில்லை. கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கான சுயநலக் கையேடு என்று காலம் காலமாக அவதூறு செய்யப்பட்டு, பல நூற்றாண்டுகளாகத் தடை செய்யப்பட்ட நிக்கோலோ மாக்கியவெல்லியின் இந்த மாபெரும் படைப்பு, உண்மையில் எதைக் கூறுகிறது?
சுதந்திர தாகங்கொண்ட சாமானிய மக்களை, அடக்குமுறை ஆட்சியாளர்கள் எவ்வாறு படிப்படியாகத் தங்கள் தந்திரங்களால் அடிமைகளாக்குகிறார்கள் என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டும் ஓர் எச்சரிக்கை நூலே இது. அதிகாரத்தின் ரகசிய சூட்சுமங்களையும், மனித இயல்பின் நிஜ முகத்தையும் அப்பட்டமாக விவரிக்கும் இந்த உலகளாவிய செவ்வியல் (Classic) இலக்கியம், அதன் மூலத்தின் ஆன்மா சிதையாமல், இப்போது முதன்முறையாகத் தமிழ் வாசகர்களின் சிந்தனைக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறது.
உலக அரசியல் மேடையின் திரைமறைவு உண்மைகளைப் புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய காலப்பேழை!
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9788119628032 |



Reviews
There are no reviews yet.