என்றென்றும் தாரா (தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள்)
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
தமிழில்: நிர்மால்யா
நவீன இந்திய பெண் எழுத்தின் முன்னோடியாகவும் அதே வேளையில் பெண்ணியத்திற்கெதிரான வலுவான குரலாகவும் ஒலிப்பவை கமலாதாஸின் கதைகள். தனது கதாபாத்திரங்களை அன்பின், காதலின் மொழியினூடாகப் புதியதோர் உலகில் பிரவேசிக்க வைத்தவர். அன்புக்கு ஏங்கும் பெண்கள் மூலம் தன்னையே கதாபாத்திரமாக வெளிப்படுத்திக் காட்டியவர். கமலாதாஸ் ஒருபோதும் குடும்ப உறவை எதிர்ப்பவர் அல்ல. ஆனால், மரபான பெண்ணின் மனச்சாய்வுகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எள்ளி நகையாடவும் அவர் தயங்கவில்லை.
‘பட்டுப்புடவையும் மாடமாளிகைகளும் ஆபரணங்களும் மட்டும் பெண்ணுக்கு நிறைவைத் தராது. அவளது ஆன்மா, அன்பின் வேட்கையைத் தணிக்க காதலைத் தேடக் கூடியது’ என்று இவர் கூறியபோது ஆணாதிக்கச் சமுதாயம் வெகுண்டெழுந்தது.
காமத்தைப் பேசுபொருளாக முன்வைத்துப் பிரசித்தி அடைந்தார் என்கிற சில விமர்சனக் கூற்றுகளைப் பொய்ப்பிக்கும் விதமாக அவரது படைப்புகள் காலத்தை வென்று நிற்கின்றன. கவித்துவம் ததும்பும் ஆன்மிக அடியோட்டமே அவரது படைப்புகளை நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியல் வரை எடுத்துச் சென்றது.
உளுத்துப் போன ஒழுக்க நியதிகளைக் கிழித்தெறிந்த கலகக்காரியான கமலாதாஸ் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9789393725141 |





Reviews
There are no reviews yet.