ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
தேசங்களைத் தொலைத்தவனுக்கு பறவைகள் மேல் அளப்பறிய பொறாமை இருக்கிறது. ஒரு பறவையை அதன் இறகுகளில் வலிக்க வலிக்க. தன் தேசத்தின் வரைபடத்தை வரைந்து, அதை தன் வீட்டிற்குள் பறக்கவிட அவன் எத்தனம் கொள்வதும் உண்டு. கவிஞன் தனக்கு பிடித்தவற்றைச் செய்யும் முன், மக்களுக்கு அது, எப்பொழுது பிடிக்காமல் போகும் என, அக்கணத்தை சிலையாய் செய்துவைப்பவனே கவிஞன் அத்தகைய கவிதா புலம் மிக்க கவிதை தொகுப்பு இது.
நரனின் கவிதை வெளி ரூபங்களால் ஆனது. வடிவங்களுக்கும் வடிவின்மைக்குமான உறவை, உறவின்மையை வண்ணங்களுக்கும் வண்ணமின்மைகுமான உறவை, உறவின்மையைத் தொட்டும் விலக்கியும் சேர்த்தும் வியந்துகொண்டே இருக்கும் கவி மனம் நரனுக்கு. ஜியோமிதி விதிகள், தர்க்கங்கள், மீப்பொருண்மையின் சலனங்கள் என யாவும் கவிதை எனும் மாயவெளியில் ஈவண்ட் ஹாரிஜனில் குழைகின்றன. இந்த இரண்டாவது தொகுப்பின் வழியே தன் கவிதைகளை அடுத்த தளத்துக்கு நகர்த்தியுள்ளார் கவிஞர். சமூக, அரசியல்பிரக்ஞையுள்ள வடிவ நேர்த்தி மிக்க கவிதைகள் இவை. ஒரு கத்தியின் கூர்மையுடனும் துல்லியத்துடனும் மொழிக்குள் பயணிக்கும் கவி மனம் சொற்கள் வழியே நிகழ்த்திக்காட்டுவது ஒரு மேஜிக். இது இயல்பாக எந்த எத்தனமும் இன்றி நேர்வதில்தான் நரனின் தனித்தன்மை உள்ளது.
– இளங்கோ கிருஷ்ணன்
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |
| ISBN | 9789384301965 |



Reviews
There are no reviews yet.