ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் உழைக்கும் நம்மைப் பற்றி நாம் நினைக்கும் நேரம் மிக மிகக் குறைவு.
எண்ணங்கள் எல்லாமே நம் குடும்பத்தைச் சுற்றி, நம் உத்தியோகம், நம் வருமானம், எதிர்காலத்தில் கட்டப்போகும் வீடு, மகனின், மகளின் கல்யாணம் கடைசியில் சேமிப்பைச் சுற்றியே வருகிறது. இந்த சுழற்சி இறுதியில் நம்மை மருத்துவமனைகளிலும், மருந்துக் கடைகளிலும் கொண்டுபோய் நிறுத்தி விடுகிறது. இதற்கு என்னதான் தீர்வு?
உங்கள் கால்கள் முன்னோக்கி உழைப்பின் பக்கம் ஓடட்டும். உங்கள் மனம் பின்னோக்கி இலக்கியத்தின் பக்கம் திரும்பட்டும். பயண நேரத்தில், ஓய்வு நேரத்தில் கதைகள், கவிதைகள், தத்துவங்கள் ஆகியவற்றின் பக்கம் கவனத்தைத் திருப்புங்கள்.
இவை இலவசமாக LD GOT அமைதியைக் கொடுக்கும். எனது தினசரி பரபரப்பான பேருந்துப் பயண வாழ்க்கையில், எனக்கு மன அமைதியைக் கொடுத்து உற்ற சிநேகிதிகளாக இருப்பவை நல்ல நூல்களே. இவற்றில் கவனம் செலுத்தாவிட்டால், இந்த இயந்திர வாழ்க்கையில் வேலைக்குச் செல்பவர்கள் அனைவருக்குமே பைத்தியம் பிடித்துவிடும்.
மனதை நல்ல நூல்களின் பக்கம் திருப்பினால் மருத்துவமனை தேவையில்லை. மருந்து கடை தேவையில்லை. சுகர் ஃப்ரீ தேவையில்லை. மிகவும் ஆரோக்கியமாகவே இனிப்புகளைச் சுவைத்து மகிழலாம்.
இதோ – ஓஷோ என்ற மனோதத்துவ நிபுணர் மனித மனதிற்கு ஓய்வு கொடுக்க 1,000 தத்துவங்களை அள்ளி வழங்கியிருக்கிறார். மனதையும், மனிதத்தை யும் வாழ்க்கையில் எப்படி வழிநடத்திச் செல்வது என்ற பல புதிய சூட்சுமங்களை மயிலிறகால் வருடுவது போன்று மென்மையாகச் சொல்லியிருக்கிறார்.
நிச்சயமாக எவ்வளவு படித்த பெற்றோர்களாக இருந்தாலும், பேராசிரியர்களாக இருந்தாலும் இந்த அளவு தெளிவான ஞான மார்க்கத்தை காட்டுவார்களா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு உலக அளவில் ‘தத்துவங்களின் தந்தை’ யாக இந்த ஓஷோ விளங்கு கிறார்.
‘ஓஷோ 1000’ என்ற இந்த நூலில், பல மாத கடின உழைப்பைப் பார்க்கிறேன். இந்த நல்ல பொக்கிஷத்தை தமிழ் வாசகர்களுக்குக் கொடுத்தத் தொகுப்பாளருக்கு ஒரு நன்றி. வணக்கம். குறைந்த விலையில் இந்த நல்ல நூலைக் கொடுக்கும் நர்மதா பதிப்பக உரிமையாளர், ஐயா திரு. டி.எஸ். இராமலிங்கம் அவர்களுக்கு வணக்கம்.
– அ. பர்வீன் சுல்தானா
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.5 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 272 |
| Format | paperback |
| ISBN | 9789386433862 |



Reviews
There are no reviews yet.