கங்கை எங்கே போகிறாள்?

Original price was: ₹250.00.Current price is: ₹237.00.

Only 4 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

எனது வாசகர்களில் மிக அதிகமானவர், அதி சந்தர்ப்பங்களில், பல தடவை பரிச்சயம் கொண்ட நாவல் “சி நேரங்களில் சில மனிதர்கள்” அந்த நாவலில் வருகிற கங்கா எனக்கே ஒரு கதாபாத்திரம் என்ற எல்லையை மீறி வாழ்க்கையில் பிரவேசிக்க முயல்கிற மாதிரி உயிர் பெற்றெழுகின்ற பாத்திரம தோன்றுகிறது.

சில நேரங்களில்”.. நாவலை ஒரு முழுமை என்று எல்லாரும் ஏற்றுக் கொண்டுவிட்ட பிறகுச் சாஹித்ய அகாடமி பரிசு தந்து விட்ட பிறகு (முடிவு பெறாத நாவலுக்கு அகாடமிக்காரர்கள் பரிசு தருவதில்லை) அதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பகுதியாக இன்னொரு நாவலை நான் எழுதத் துணிந்தேன் எனில் ஒரு கதை, சமகாலமாந்தரைப் பற்றிய கதை, அவர்கள் உயிருடன் உள்ளவரை முடிந்து போனதாகாது என்பதால் மட்டுமல்ல; அந்தப் பாத்திரங்கள் பாதியில் விரக்தியுற்ற, குறைபட்ட, வடுப்பட்டவர்களாக இறுதியடையலாகாது எனும் நல்லெண்ணமே ஆகும். இந்த நல்லெண்ணம் ஏதோ காருண்ய உணர்ச்சியால் எழுந்தது அல்ல வாழ்க்கை பற்றி நற்கருத்தும், நல்ல சித்தாந்தமும் உடையோர் தவிர்க்க வொண்ணாத தர்மம் அது. விரக்தியும், துன்பமும் வாழ்க்கையில் ஓர் இடைநிலைத் தோற்றம் தானே தவிர அதுவே இறுதியல்ல; முடிவு அல்ல என்ற கருத்துடையவர்கள்.

‘கலை உருவத்துக்காகவும்’ ‘புதுமைக்காகவும் ‘ஒரு மாற்றத்துக்காகவும் தப்பான செய்திகளை, அவ நம்பிக்கையை, விதைத்து அறுவடை செய்கிற முடிவுகளுக்குத் தங்கள் படைப்புகளை மனமொப்பித் தாரை வார்த்துவிட முடியாது. அவ்விதமான ஒரு முடிவினை முதல் பாகத்தில் இறுதியாகவும், இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பமாகவும் கொண்டது முழுமையான கதையோட்டத்தின் நடுவே நிகழ்ந்த இடைநிலைத் தோற்றமாயிற்று சில நேரங்களில் சிலமனிதர்களின் இரண்டாம் பாகமே ‘கங்கை எங்கே போகிறாள்?’ எனினும் முன்னதை எழுதும் போது இரண்டாவது பற்றிய எண்ணமே எனக்கிருந்ததில்லை என்பதைச் சொல்லிவிட வேண்டும். ஏற்கனவே இன்னொரு பத்திரிகையில் முதல் பாகத்தை எழுதி முடித்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மற்றுமொரு பிரபலமான பத்திரிகையில் வேறொரு தலைப்பில் இரண்டாம் பாகத்தை எழுதுகிற ‘மரபை’ எனக்கு முன் வேறு யாரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இது ஒரு சிறப்பு எனின் அதற்கு முழுப் பொறுப்பும் குமுதம் பத்திரிக்கைக்குச் சேர வேண்டும் என்று விரும்புகிறேன்.

வாசகர்களுக்கும், பதிப்பகத்துக்கும் எனது வழக்கமான நன்றி என்றும் உண்டு.

Ganga, Gangai, Ganga, Engae, Enge, Engae, Pogiraal, Pogiral, Pogiraal, jeyakandhan, Meenakshi Puthaka Nilayam

Additional information

Weight 0.2 g
Dimensions 1.2 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

252

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கங்கை எங்கே போகிறாள்?”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories