கதை திரைக்கதை வசனம் இயக்கம்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
சினிமாவை சின்ன அம்மாவைப் போல (அம்மாவுக்கு அடுத்து) சிரமேற்கொண்டு பாதுகாக்கும் கலைமகன்களாகிய ரசிகர்களுக்கு என் முதல் நன்றி. தயாரிப்பாளர்களால், விநியோகஸ்தர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ கதைப்பிண்டங்களுக்கு உயிர் கொடுத்த மருத்துவச்சிகள் அவர்கள். என்னைப் போன்றோரை STAR ஆக்குபவர்கள். STAR-ஐ Super Star ஆக்கியவர்கள்.
பழைய படங்களை சவுக்கால் அடித்து நிராகரித்து நிராகரித்து. புதிய வித்தியாசமான படங்களை வரவேற்று வரவேற்று, சினிமாவை அடுத்தடுத்த கட்@டங்களுக்கு உயர்த்திய ஏணிகள் அவர்கள். என் KTVI சராசரி படமல்ல. குறிப்பாக அதன் Climax. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடத் தகுதியான ஒரு முடிவில்லா முடிவுள்ள இப்படத்தை எழுந்து நின்று கைதட்டி வரவேற்றதன்மூலம் தமிழ் சினிமாவின் தரத்தை மூணேமுக்கால் முழம் உயர்த்தியுள்ளனர். ரசிகர்களை மட்டுமே நம்பி நான் எடுத்த இப்படத்தை வெற்றியாக்கி பேரானந்தத்தில் என்னை கண்ணீர் சிந்தவிட்டவர்கள். எனவே இவ்வெற்றியை நெற்றிக்காசாக சுமப்பேன் இறுதிவரை.
என் ஆன்ம நன்றி… சினிமாவை திரையில் மட்டுமே கண்டு ரசித்து பாராட்டும் கலாரசிகர்களுக்கு,
அடுத்த நன்றி…
தொடர்தோல்விகள் கண்ட வெற்றியாளன் என்ற ஒரே தகுதியுள்ள என்னை, கதை கேட்டு சோதனைக்குள்ளாக்காமல் என்மீது என்னைவிட கூடுதல் நம்பிக்கை வைத்து KTVI-ஐ தயாரித்து, வெளியிடும்போது ஏற்பட்ட சோதனைகளை கூடுதல் செலவு செய்து விளம்பரித்து வெற்றி பெறச்செய்த தயாரிப்பாளர் திரு. சந்திர மோகன் அவர்களுக்கு.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.5 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Pages | 248 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.